முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
- அமைச்சர் பைஸர் முஸ்தபா நடவடிக்கை
( மினுவாங்கொடை நிருபர் )
கொழும்பு - ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் 70 வருட காலமாக நிலவி வந்த குடி நீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மா நகர சபை முன்னாள் உறுப்பினர் துஷார ஹேமந்த மஞ்சுவின் விசேட வேண்டுகோளுக்கிணங்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
ஜிந்துப்பிட்டி, ஆட்டுப்பட்டித்தெரு, மசங்கஸ் வீதி, விவேகானந்த வீதி ஆகிய பிரதேசங்களில், கடந்த 70 வருட காலமாக மக்களுக்கான குடிநீர் விநியோகம், தினமும் காலை (6-9 வரையிலான) 3 மணித்தியாலங்களும், மாலை (6-8 வரையிலான) 2 மணித்தியாலங்களுமாக மொத்தம் 5 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், அமைச்சர் பைஸர் முஸ்தபா இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே, இந்நீர் விநியோகம் தற்போது 24 மணி நேரமும் எவ்விதத் தங்குதடைகளுமின்றி குறித்த பிரதேச மூவின மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருவதாக முன்னாள் உறுப்பினர் மஞ்சு தெரிவித்தார்.
கடந்த 70 வருட காலமாக இப்பிரதேச மக்கள் குடிநீர் பெறுவதில் இருந்த கஷ்ட நிலையை நீக்கி, இவ்வாறு நிவாரணம் பெற்றுத் தந்தமைக்கும், இதற்காக பொருத்தமான பயன்மிகு நடவடிக்கைகளை மேற்கொண்ட முன்னாள் உறுப்பினர் மஞ்சு, அமைச்சர் பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இப்பிரதேச வாழ் மக்கள் மகத்தான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
Comments
Post a comment