Skip to main content

වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි

   වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන්  කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්‍රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ .  නියෝජ්‍ය පොලිස්පති , පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්‍රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්‍ය ප්‍රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්‍රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර

கல்லொழுவை அல் - அமானுக்கு 1 கோடியே 20 இலட்சம் ஒதுக்கினார் ஹக்கீம்



( மினுவாங்கொடை நிருபர் ) 

மினுவாங்கொடை - கல்லொழுவை பிரதேச வாழ் முஸ்லிம் மக்களின் கல்வி முன்னேற்றப்பணி மற்றும் விளையாட்டுத்துறை ஆகியவற்றை நோக்காகக் கொண்டு, கல்லொழுவை அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அழுத்மாவத்தையில் அமைந்துள்ள முனாஸ் ஹாஜியார் விளையாட்டு மைதானத்தை,  நவீன முறையில் சம்பூர்ணமாக விரிவுபடுத்தி மீளமைப்புச்  செய்யும் நடவடிக்கைகளுக்காக, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 
   இதேவேளை, கல்லொழுவை பிரதேசத்தின் ஒரு கிலோ மீற்றருக்கான கார்பட் வீதி மற்றும் ஒரு கிலோ மீற்றருக்கான கழிவுக் கால்வாய்  அமைப்புத் திட்டம் ஆகியவற்றுக்கும் அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். 
   இதுதவிர, கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் முற்ற வெளியை கொங்கிறீட் கற்களினால் சிறந்த முறையில் அழகுபடுத்தி அமைத்துக் கொடுப்பதற்கான பணிப்புரையையும் அமைச்சர் அதிகாரிகளுக்குவிடுத்துள்ளார். 
  அத்துடன்,  கல்லொழுவை முஸ்லிம் பிரதேசத்தில் மிக நீண்ட நாள் குறைபாடாக இருந்து வரும் குடி நீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், இப்பிரதேசத்தின் சகல பகுதிகளுக்கும் குடி நீர்க் குழாய்களைப் பொருத்தவும் அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
   இதற்கமைவாக, நீர் வழங்கள் வடிகாலமைப்பு நிபுணர் குழுவால் இப்பிரதேச வரைபட எல்லைகள் தற்போது துரிதமாகத் தயார்படுத்தப்பட்டு வருவதாகவும், இவ்வரைபட வரைபை மேற்கொள்வதற்கான பணியை ஆரம்பிக்கும் வகையில், குறித்த நிபுணர் குழுவினரால் விரைவில் நில அளவை செய்யப்படவுள்ளதாகவும், அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
   மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம்,  மினுவாங்கொடை பிரதேச சபைக்கு ஸ்ரீல.மு.கா. சார்பில் களமிறங்கியுள்ள  வேட்பாளர்களான எச்.எம். றபாய்தீன், யூ.எம். இம்தியாஸ் மற்றும் ஏனைய வேட்பாளர்களின்  வேண்டுகோளுக்கிணங்கவே, குறித்த அபிவிருத்திப் பணிகளுக்காக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313