ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
– கஹட்டோவிட்ட ரிஹ்மி – நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலானது புதிய முறையிலான கலப்புத் தேர்தலாக நடைபெறவுள்ளது. இதுவரைகாலமும் இருந்த விகிதாசார முறைமைக்குப் பதில் வட்டாரமும் விகிதாசாரமும் 60:40 என்ற விகிதத்தில் ஆசனப்பகிர்வு செய்யப்பட்டு தேர்தல் நடைபெறவுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இந்த தேர்தல் முறைமை தொடர்பாக வாக்காளர்கள் மத்தியில் போதிய தெளிவின்மை இருந்து வந்தது. தற்போதும் அந்த நிலைமை இருந்தாலும் வட்டார முறைமையில் வாக்காளர்களுக்கு ஓரளவு தெளிவு இருப்பதோடு, விகிதாசார முறைமையில் மயக்கநிலை அவர்களிடம் தொடர்வதினை அவதானிக்க முடியுமாகவிருக்கிறது. அதனை இலகுவாக விளக்குவதற்கு நான் அத்தனகல்ல பிரதேச சபையினை உதாணத்திற்கு எடுத்துக்கொள்கிறேன். அங்கு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அண்ணளவாக 150 000 எனக்கொள்வோம். அங்குள்ள மொத்த பிரதேச சபை ஆசனங்கள் 50 பேர் ஆவர். 60:40 என்ற முறைப்படி 30 ஆசனங்கள் வட்டாரமுறைப்படியும் 20 ஆசனங்கள் விகிதாசாரப்படியும் பகிரப்படும். தேர்தலின் போது இங்கு 121 000 வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், 1000 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் கருதுவோம். அதன்படி இங்கு 120 00