எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
( ஐ. ஏ. காதிர் கான் )
"ஒற்றுமை -
சகிப்புத்தன்மை - சக வாழ்வு"
எனும் தொனிப் பொருளில், தெஹிவளை -
"றோயல் ஹெல்த் லிங்க் "
பணியகம் ஏற்பாடு செய்திருந்த மீலாத் கருத்தரங்கு, (09) சனிக்கிழமை முழுநாள் நிகழ்ச்சியாக கொழும்பு - 10, டி.ஆர்.
விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபாற் திணைக்கள
கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
மினுவாங்கொடை - கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரியின் பணிப்பாளர் டொக்டர் எம்.எச்.எம். முனாஸிக் தலைமையில் இடம்பெற்ற இச்சிறப்பு நிகழ்வில்,
"சமூக ஒற்றுமை, பெண் உரிமை, நபிகளார் பற்றிய பிறமத அறிஞர்களின். கருத்து" போன்ற தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகளும் கவிதைகளும் வாசிக்கப்பட்டதுடன், இஸ்லாமிய கீதங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்பனவும் இடம்பெற்றன.
இராஜாங்கள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி,
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் ஸாயிரி அமீரானி,
அறிஞர் சித்திலெப்பை ஆய்வு மன்றத் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா,
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் "காப்பியக்கோ" டொக்டர் ஜின்னாஹ் ஷரீப்தீன்,
அ.இ.ம. காங்கிரஸ் தேசிய மகளிர் அணித்தலைவி கலாநிதி ஹஸ்மியா உதுமாலெப்பை
உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள், வளவாளர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Comments
Post a comment