எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
( மினுவாங்கொடை நிருபர் )
கொழும்பு - மன்ஸில் மன்றத்தின் இலவச வாழ்வாதார வேலைத்திட்டத்தின் கீழ், இன மத மொழி பேதங்களின்றி வறுமைக்கோட்டில் தொழிலற்று வாழும் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு, அவர்களின் சுய தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில், தையல் இயந்திரங்கள், சமையல் உபகரணங்கள் மற்றும் கேஸ் அடுப்புக்கள் வழங்கல், குறைந்த வருமானமுள்ள குடும்பங்களில் கல்வி பயிலும் இரண்டாயிரம் பாடசாலைச் சிறார்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கல், பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் போன்ற நிகழ்வுகள், 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு, கொழும்பு - மாளிகாவத்தை, கெத்தாராம விளையாட்டரங்கிற்கு முன்னால் அமைந்துள்ள மன்ஸில் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மன்ஸில் மன்றத்தின் 13 ஆவது வருட நிறைவை முன்னிட்டும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் மக்கள் தொடர்பு அதிகாரியும், ஸ்ரீல.சு.க. யின் கொழும்பு மேற்கு பிரதான அமைப்பாளருமாகிய எம்.எச். மன்ஸிலின் பிறந்த நாளை முன்னிட்டும் இடம்பெறவுள்ள இச்சிறப்பு நிகழ்வுகள், அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் தலைமையில் நடத்தப்படவுள்ளன.
அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர மற்றும் மேல்மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய உள்ளிட்ட மேலும் பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவிருப்பதாக, ஸ்ரீல.சு.க. யின் மத்திய கொழும்பு இளைஞர் அணிக் குழுத் தலைவர் சப்னி மன்ஸில் தெரிவித்தார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Comments
Post a comment