Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிர‌ஸுக்குள் மோத‌ல்

அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு!!

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அங்கு பெரும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, கட்சியின் அட்டாளைச்சேன மத்திய குழுவினர் அங்கு முரண்பட்டுக் கொண்டு, வெளியேறியதாகவும் அறிய முடிகிறது.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பான கூட்டம், கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் தலைமையில் நிந்தவூரிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இதில், பிரதியமைச்சர் பைசல் காசிம், கட்சியின் தவிசாளர் முழக்கம் மஜீத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர், அண்மையில் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தனர்.

மு.கா. தலைமையினால் வாக்களிக்கப்பட்டமைக்கு இணங்க, அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, உள்ளுராட்சித் தேர்தல் வேட்புமனு சமர்ப்பிப்பதற்கு முன்னர் வழங்க வேண்டும் எனவும், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்த மரச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் அந்த தீர்மானங்கள் அமைந்திருந்தன.

இந்த நிலையில், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நேற்று நிந்தவூருக்கு சென்றிருந்த அட்டாளைச்சேனை மத்திய குழுவினர், அங்கிருந்த கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பரிடம் தமது தீர்மானங்கள் குறித்து ஞாபகப்படுத்தியதோடு, வேட்புமனுக்கான உறுப்பினர்கள் பட்டடியலை தயாரிப்பதற்கு முன்பாக, அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் தன்னால் எதையும் கூற முடியாது என்றும், தேசியப்பட்டியல் விடயத்தில் தலைவர்தான் தீர்மானிப்பார் எனவும், கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் கூறினார்.

இதனையடுத்து, அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு – ஒரு கட்டத்தில் ஆத்திரமடைய, அங்கு பாரிய கூச்சல் குழுப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாமல், உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை தாங்கள் வழங்கப் போவதில்லை என்று, அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் கூறினார்கள்.

இதன்போது, அங்கிருந்த மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரமுகரும், கட்சியின் உயர்பீட உறுப்பினருமான பளீல் பி.ஏ; மு.காங்கிரசின் செயலாளரிம் சென்று, அட்டாளைச்சேனையில் மு.கா. சார்பாக போட்டியிட தயாராகவுள்ள வேட்பாளர்களின் பட்டியலொன்று தன்னிடம் உள்ளதாகக் கூறி, அவ்வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை அங்கு சமர்ப்பித்தார்.

பளீல் பி.ஏ.யினுடைய இந்த நடவடிக்கை, அங்கிருந்த அட்டாளைச்சேனை மத்திய குழுவினரை மேலும் ஆத்திரமடையச் செய்ய, நிலைமை மேலும் மோசமானது.  பளீல் பி.ஏ.யை, அட்டாளைச்சேனை மத்திய குழுவைச் சேர்ந்த சிலர், கடுமையாக ஏசிப் பேசியதாகவும், தாக்குவதற்கு முற்பட்டதாகவும் அறிய முடிகிறது.

இறுதியில், அட்டாளைச்சேனைக்கான வேட்பாளர் தெரிவு நடவடிக்கையை பகிஸ்கரித்து, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் அங்கிருந்து வெளியேறினர்.

இந்த நிலையில், பளீல் பி.ஏ. வழங்கிய வேட்பாளர் பட்டியலை மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர் பெற்றுக் கொண்ட போதிலும், அதனை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பதை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம்தான் தீர்மானிப்பார் என, கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத