கொழும்பு மாநகரசபை தேர்தலில் களமிறங்கும் பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் நேற்று தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ரோஸி சேனாநாயகவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலியும், ஒன்றிணைந்த முற்போக்குக் கூட்டணியின் சார்பில் முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதனும் களமிறங்குகின்றார்.
அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளுாராட்சி மன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வேட்புமனுத்தாக்கல் நேற்று நண்பகல் 12 மணியுடன் முடிவுக்கு வந்தது.
அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் நேற்றைய தினம் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் கொழும்பு மாநகரசபை தேர்தலில் களமிறங்கும் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் நேற்று தமது வேட்புமனுத்தாக்கலை மேற்கொண்டனர்.
ஐந்து இலட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் மக்கள் தொகையை கொண்டுள்ள கொழும்பு மாநகரசபை தேர்தலில் தமது அதிகாரங்களை கைப்பற்றும் வகையில் பிரதான கட்சிகள் களமிறங்குகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஒருமித்த முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, பொதுஜன முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் நேற்று காலை தொடக்கம் 12 மணி வரையில் தமது வேட்புமனுக்களை கொழும்பு நகர மண்டபத்தில் தாக்கல் செய்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ரோஸி சேனாநாயகவும், ஸ்ரீீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலியும் களமிறங்குகின்றனர்.
மேலும் தமிழர் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து களமிறங்கும் என்ற நிலைப்பாட்டில் இருந்த போதிலும் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக இம்முறை தமிழர் முற்போக்குக் கூட்டணி கொழும்பு மாநகரசபை தேர்தலில் தனித்து களமிறங்குகின்றது. ஒருமித்த முற்போக்கு கூட்டணியாக அடையாளப்படுத்தி ஏணி சின்னத்தில் களமிறங்கும் நிலையில் கொழும்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் சண்.குகவரதன் களமிறங்குகின்றார்.
மேலும் ஸ்ரீீலங்கா பொதுஜன முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் சார்பிலும் உறுப்பிர்கள் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.
( ஆர்.யசி)
Post a Comment