முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
பண்டிகைக் காலங்களில் பஸ் வண்டிகளில் முறைகேடுகள் இடம்பெற்றால் 1955 க்கு அறிவிக்கவும்
- பயணிகளிடம் போக்குவரத்து ஆணைக்குழு வேண்டுகோள்
( மினுவாங்கொடை நிருபர் )
நத்தார் மற்றும் புது வருட பண்டிகைக் காலங்களில் தனியார் பஸ் வண்டிகளில் முறைகேடுகள் ஏதும் ஏற்பட்டால், அவை தொடர்பாக உடனடியாக அறிவிக்குமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.
அதிக பணம் வசூலிப்பு, மிகுதமாக பயணிகளை ஏற்றுதல், பஸ் பிரயாணச் சீட்டு வழங்காமை மற்றும் குறிப்பிட்ட வீதிகளில் பயணிக்காமல் இடை நடுவில் போக்குவரத்துப் பாதையினை மாற்றுவது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
பயணிகள் குறித்த முறைகேடுகளை 1955 அல்லது 011 23 33 222 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக அழைத்து, முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் ஆணைக்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட பஸ்களில் இடம்பெறும் குறித்த முறைகேடுகளிலிருந்து பயணிகளைப் பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கு மிகச் சிறந்த பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments
Post a comment