Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

அரசியல் ஞானமற்ற ஒருவரே மட்டக்களப்பின் பிரதிதிதியாக அவருக்குத் தேவைப்பட்டார்


எம்மாத்திரம் முயற்சிகள்!

2010 இலிருந்து நான் எடுத்த அரசியல் எத்தனங்கள் எல்லாம் நமது முஸ்லிம் காங்கிரசை நமது மக்களுக்கான கட்சியாக மீட்டு எடுப்பதற்கானதே என்பதை உறுதி செய்து ஒப்புதல் வாக்கு மூலமாக அளிக்க விரும்புகிறேன்.

அவ்வருடம் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் தோல்வியடைவேன், மாற்றுக் கருத்தின் தொல்லை ஒழிந்தது என்று ஹக்கீம் நம்பினார்.தேர்தல் நடந்து முடிந்து மட்/ இந்துக்கல்லூரியில் வாக்கெண்ணுதல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரவு11 மணியளவில் வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து லேக் டிறைவ் ஹோட்டலுக்கு அசதி போக்கும் நோக்கோடு வந்தேன். குளித்து தலை துவட்டும் போது ஊடகவியலாளர் நண்பர் நூர்தீன் எனக்கு அவசரமாகத் தொலை பேசினார்., உடனடியாக வாக்கெண்ணும் நிலையத்துக்கு வாருங்கள் உங்களது கட்சிக்கும் பிள்ளையானின் கட்சிக்கும் சிறு வித்தியாசத்தில் கடும் போட்டி நிலவுகிறது, நீங்கள் இங்கில்லாவிட்டால் எல்லாம் பிழைத்துவிடும் என்று பதறினார். நான் உடனே ஓடிச்சென்று வாக்கெண்ணும் பணியில் ஒன்றிப் போனேன்.

தலைவர் ஹக்கீம் அதிகாலை 2.00 மணிக்கு எனது தொலை பேசியில் தொடர்பு கொண்டு மட்டக்களப்பில் நிலவரம் என்ன என்று வினவினார். இங்கு நமக்கு ஒரு ஆசனம் நிச்சயம் என்றேன். நமது கட்சி வேட்பாளர் எண்மரில் அவ்வாசனம் யாருக்குக் கிடைக்கும் என்று கேட்டார். எனக்குத்தான் கிடைக்கும் என்று அவருக்கு மகிழ்ச்சியோடு சொன்னேன், அவர் பெருமகிழ்ச்சி அடைவார் என்று நினைத்து. நான் நினைத்ததில் தவறில்லை, ஏனெனில் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 10 வருடங்கள் கட்சிக்கு ஏற்பட்ட எல்லா சவால்களுக்கும் முகம் கொடுத்தவர்களில் முதன்மையானவன் நான் என்பதையும் அவரது தனிப்பட்ட விவகாரங்களில் எனது உயிரை விடுவதற்கும் தயாராய் நின்று அவரைக் காப்பாற்றியவன் நான் மட்டும்தான் என்பதையும் ஹக்கீமே அதிகம் தெரிந்தவராகும். ஆனால், நான்தான் வெல்வேன் என்று சொன்னதும் அவரால் அடுத்த வார்த்தை எதையும் பேசமுடியவில்லை, 5 நிமிடம் அமைதி நிலவியது, ஒன்றும் பேசாமல் தொலை பேசியை வைத்துவிட்டார். அல்ஹம்துலில்லாஹ் நல்லது பஷீர் என்றல்லவா அவர் சொல்லியிருக்க வேண்டும். அன்று அவருக்கு வேண்டியது கட்சிக்கு ஆசனம் கிடைக்கவேண்டும் அது நானாக இருக்கக் கூடாது.

மட்டு மாவட்டத்தில் உள்ள மூன்று முஸ்லிம் ஊர்களிலும் நடைபெற்ற இந்தத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களில் கலந்துவிட்டு  காத்தான்குடியைச் சேர்ந்த உச்சபீட உறுப்பினர் முபீன் அவர்களுடன் தலைவர் பதுளைக்குப் பிரச்சாரத்துக்காகச் செல்லும் வழியில் இம்முறை பஷீர் வெல்ல முடியாது ஓட்டமாவடியைச் சேர்ந்த லெப்பை ஹாஜியார்தான் வெல்வார் என்று கூறியதாக பின்னர் ஊர்ஜிதமாகத் தெரிந்துகொண்டேன். எனவே, அரசியல் ஞானமற்ற ஒருவரே மட்டக்களப்பின் பிரதிதிதியாக அவருக்குத் தேவைப்பட்டார். கேள்வி கேட்கக் கூடாது, தலைவர் சொல்வதையும் செய்வதையும் தலையாட்டி ஆமாம் சாமி போடுபவர்களே கிழக்கில் அவருக்குத் தேவைப்பட்டனர். ஆனால் 2010 இல் நான் வென்று நாடாளுமன்ற உறுப்பினரானேன்.

2000 ஆம் ஆண்டில் ஹக்கீமுக்கான ஆலோசனைக்கான வாயும் மக்கள் விசுவாசத்துக்கான மனதுமாய் இருந்த எனது வாய் துப்பாக்கியாயும், மனது மக்கள் மன்றமாயும் ஆனது இப்போதுதான்.  2015 ஆம் ஆண்டு எனக்கு கட்சியில் தேர்தல் வாய்ப்பை ஹக்கீம் மறுத்ததற்கான காரணம் 2010 இல் வென்றதைப் போல் பஷீர் வென்று விடுவான் என்ற அவரது அச்சமே ஆகும். இந்தப் பின்புலக் காட்சிக் கதையின் விளைவே இன்று றவூப் ஹக்கீமின் எதேச்சாதிகாரம் தூள் தூளாகி வருவதன் அடிப்படையாகும்.

நான் அரசியல் அதிகாரம் இல்லாதிருந்தாலும் அரசியல் அறிவு இல்லாதவனல்ல என்பதை ஹக்கீம் நன்கறிவார்.
நான் கட்சியில் தொடர்ந்திருக்கவும் வேண்டும் அவருக்கு தேவைப்படும் போதெல்லாம் கட்சியின் புத்தி ஜீவிகளையும், விசுவாசிகளையும், கிழக்கு நேசர்களையும் கடித்துக் குதற அவ்வப்போது  "றெகுலா பல்" முளைக்கவும் வேண்டும். இதற்காகத்தான் 2015 இல் கட்சியின் யாப்பில் அடிமைச் செயலாளர் பதவியை உருவாக்கினார்.

எனது கதைக்குச் சமாந்தரமான ஒரு கதை நண்பர் செயலாளர் நாயகம் ஹஸனலிக்கும் உண்டு. 2008 இல் இடம்பெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து போட்டியிடுவதற்கு தடையாக ஹஸனலி இருந்தார். கிழக்கு முஸ்லிம்களின் காணி விடயங்களில் விட்டுக் கொடுப்புக்குக்கு உடன்படாது அவர் காணப்பட்டார்.எழுத்து மூல ஒப்பந்தங்கள் இல்லாது எந்தத் தேசியக் கட்சிகளுடனும் உடன்பட மறுத்தார், இறுதியாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுடன் கூட்டுச் சேர மறுத்து நிஸாம் காரியப்பரின் வீட்டில் எதிரணிக்கு தேர்தல் வேலை செய்யும் வகையில் கட்சி முக்கியத்தர்களை இணைத்து கூட்டம் போட்டார் இவை போன்ற நடவடிக்கைகளால் ஹக்கீம், ஹஸனலி மீது பல்லைக்கடித்தபடி முகம் பார்த்துச் சிரித்து அவருக்கு கழுத்தறுத்தார்.

எனது அரசியல் நகர்வுகளும், ஹஸனலியின் நகர்வுகளும் ஒத்த பாதையில் செல்லவில்லை ஆயினும் கிழக்கின் உச்சத்தை தொடுவதில் சமாந்தரமான பயணமாக இருந்தது.

எனவேதான் கட்சி யாப்புத் திருத்தம் மூலம் ஹக்கீம் தனது சுய திருத்தல யாத்திரையைத் தொடர ல முனைந்தார். இந்த யாத்திரைதான் இன்று அவரைத் தோல்வியின் நித்திரைக்கு அழைத்துச் செல்கிறது.

இந்த நித்திரைக்கான நித்திய யாத்திரையை நிகழ்தகவான பயணமாக்குவதை அடிப்படையாகக் கொண்டே கட்சியின் உச்சபீட உறுப்பினர் பலரின் துணையுடன் கடந்த மூன்று வருடங்களாகச் செயல்பட்டு வருகிறோம்.

இதற்காகத்தான்- தாறுஸ்ஸலாம் கொள்ளை, யாப்புத் திருட்டு, நிதிய மோசடி, அஷ்ரஃப் கொலை விசாரணை,குமாரி விவகாரம், கூட்டமைப்பு உருவாக்கம், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு உருவாக்கம் மற்றும் தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் பங்குபற்றல் ஆகிய விடயங்களைக் கையாண்டுவருகிறோம்.

ஹக்கீமின் குத்தாட்டங்கள் அனைத்தையும் 'அசிட்'டைக் கொண்டு களுவி கொடியில் காயப் போட்டுள்ளோம். வெய்யில் எறிக்காவிட்டால் பரவாயில்லை, கொஞ்சம் காற்று வீசும் வேளை இவை உலரத்தொடங்கும் போது எல்லாமே மக்களுக்கு புலனாகும். புலனாகும் போது இது மக்களுக்கே பலனாகும்.

நமது கட்சியை அழிப்பதல்ல... நமது கட்சியை மீட்பதே நமது இலக்கு. நாமே மந்திரம் ஓதி ஆடவைத்த ஹக்கீம் எனும் சுய நலப் பூதத்தை அடக்கி, மக்களின் காலடிக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு இந்தத் தேர்தலில் அவரின் தலையில் மக்கள் மீண்டும் மாற்று மந்திரம் ஓதி வாக்குகள் எனும் வேப்பிலைக் கொத்தால் அடிக்க வேண்டும். தேர்தலில் அவரைத் தோற்கடிக்க வேண்டும். இது நிகழ்ந்தால்,ஹக்கீம் உண்மையை உணரும் வாய்ப்பு ஏற்படலாம், இல்லாவிட்டாலும், கட்சி மக்களுடையதாகும். நாம் என்னென்றும் பதவிகள் எதுவும் வேண்டாதவர்களாக உங்களோடு இருப்போம்.

எந்தத் தேசியக் கட்சியின் தலைவர்களும் கற்பிக்கும் பாடத்தைவிட மக்கள் கற்பிக்கும் பாடமே சிறந்தது. அரசியலில் குலை நடுங்கும் அச்சத்தைப் போதிப்பது.
Basheer Segudavood

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய