முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
நசீர், குதிரையில் ஏறினார்...!
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவின் அமைப்பாளருமான ஐ.எல். நசீர் நேற்று (14) முன்னாள் அமைச்சா் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.
தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவை அவரது கிழக்கு வாசல் இல்லத்தில் சந்தித்து, அவர் முன்னிலையில் நசீர் இணைந்து கொண்டார். இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய காங்கிரசிக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான நசீர், அக்கட்சியிலிருந்து விலகி சில மாத காலமாக தூய காங்கிரசில் இணைந்து செயற்பட்டார். அத்துடன் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கவும் அரும்பாடுபட்டார்.
இந்நிலையில், தூய காங்கிரசினர் முஸ்லிம் கூட்டமைப்பு எனும் போர்வையில் அமைச்சர் ரிஷாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து கொண்டமையினால் அவர்களின் செயற்பாடு குறித்து அதிருப்தியுற்று தேசிய காங்கிரசில் இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் மற்றும் தே.கா. கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
( ரி.கே. ரஹ்மதுல்லா)
Comments
Post a comment