ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
அக்கரைப்பற்றில் மக்கள் காங்கிரஸின் பணிமனை அங்குரார்ப்பணம்!
-ஊடகப்பிரிவு-
அக்கரைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், மக்கள் பணிமனை ஒன்றை அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (14) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தலைமை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளருமான என்.டி.நியாஸ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், தூய காங்கிரஸின் பிரமுகருமான ஹனீபா மதனி, ஏ.எல்.மர்ஜூன் ஆகியோர் உட்பட மக்கள் காங்கிரஸின் செயலளார் நாயகம் எஸ்.சுபைர்தீன், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான எஸ்.எஸ்.பி.மஜீத், எம்.என்.எம்.நபீல், டாக்டர்.முனாசிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a comment