ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
கம்பஹா மாவட்டத்தில் தேர்தல் காலப் பகுதியில் வாகனப் பேரணிகளுக்குத் தடை
( மினுவாங்கொடை நிருபர் )
எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரத்துடன் தொடர்புடைய வாகனப் பேரணிகளுக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கம்பஹா மாவட்டத்திற்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளிலும் இந்நடைமுறை 12 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் முடியும் வரை கட்டாயம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக, கம்பஹா மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி முத்தித்த புஸ்ஸெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொலிஸ் தலைமையகத்தின் சட்ட திட்டத்திற்கு அமைவாக, இந்நடைமுறை உடன் அமுலுக்கு வரும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இந்தத் தடைகளை மீறி வாகனப் பேரணிகளை நடத்துவோருக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவோர் மீது எந்தவித தராதரமும் பாராது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கம்பஹா மாவட்டம் முழுவதும் 24 மணி நேர ரோந்துச் சேவை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும். எனவே, சட்டம், ஒழுங்கு, விதிமுறைகளைப் பேணி தேர்தல் காலத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அனைத்துக் கட்சிகளின் அபேட்சகர்களையும் ஆதரவாளர்களையும் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
Comments
Post a comment