ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
IS பயங்கரவாத இயக்கம், முடிவுக்கு வந்து விட்டது - ஈரான் ஜனாதிபதி
ஐஎஸ் தீவிரவாத இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் ஜனாதிபதி Hassan Rouhani அரசு தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் சிரியா பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கிய ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, படுகொலை, பெண்கள் சித்ரவதை உட்பட பல கொடூரங்களை அரங்கேற்றி வந்தது.
இவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான படைகள், ரஷ்யா மற்றும் ஈரான் ராணுவம் களமிறங்கியது, படிப்படியாக ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் பிடியில் இருந்த நகரங்களை மீட்டெடுக்க தொடங்கினர்.
இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் ஜனாதிபதி Hassan Rouhani அரசு தொலைக்காட்சியில் தோன்றிய நேரடியாக மக்களுக்கு அறிவித்தார்.
அத்துடன் ஈரான் புரட்சி காவலர்கள் படையின் Major General Qassem Soleimani-யும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த வாரம் சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நகரை கைப்பற்றுவதே இறுதி என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
Comments
Post a comment