முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
( மினுவாங்கொடை நிருபர் )
கம்பஹா மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகளிலும், டியூஷன் வகுப்புக்களிலும் கல்வி கற்கும் மாணவர்களை இலக்குவைத்து, அவர்களுக்கு ஒருவகை போதைப் பொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
"நடன மாத்திரை" ( Dancing Tablet ) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதி விசேட போதைப்பொருள் அடங்கிய இந்த வில்லைகளை, சர்வதேச போதைப்பொருள் விற்பனையாளர்களிடமிருந்து இந்நாட்டு முகவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் தருவித்து, மாணவர்களுக்கு விநியோகித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
பெரும்பாலும் இந்த மாத்திரைகள், களியாட்ட மற்றும் நடன நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகளுக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் இதனை உட்கொள்வதன் மூலம், தன்னை மறந்து களியாட்ட வைபவங்களில் ஆடிப்பாடி மகிழ்வதாகவும், இது தொடர்பில் பெற்றோர் எந்நேரமும் விழிப்புடன் இருந்துகொள்ள வேண்டும் என்றும், கம்பஹா பொலிஸார் பெற்றோரை அறிவுறுத்தியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் இவ்வாறான நடன நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், இதற்கு டியூஷன் வகுப்பு மாணவர்களே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக, நம்பகமாகத் தெரியவருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்தவாரம் நீர்கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் இரவு முழுவதும் இடம்பெற்ற களியாட்ட வைபவமொன்றின்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள், இந்த நடன மாத்திரையை உட்கொண்ட நிலையிலேயே நடனம் ஆடியுள்ள நிலையில், இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட இளம் வயதுடைய இளைஞர் யுவதிகள் நடனமாடியிருப்பது தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பில் கம்பஹா பொலிஸார் மற்றும் விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கம்பஹா தலைமையகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )
.
Comments
Post a comment