எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
அரசியல் நோக்கங்களுக்காக திசைமாறி செல்லுகின்ற சாய்ந்தமருது பள்ளிவாசல் தீர்மானங்களுக்கு கட்டுப்படலாமா ?
சில வாரங்களாக தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது ஜும்மாஹ் பள்ளிவாசல் நிருவாகத்தினர்களின் தலைமையில் மக்கள் எழுட்சி போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.
சாய்ந்தமருதில் பிறந்த எந்தவொரு மகனும், தனது ஊருக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் அமைவதனை வரவேற்பார்களே தவிர, எதிர்க்க மாட்டார்கள்.
அதனால் ஜும்மாஹ் பள்ளிவாசலின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்ததுடன், எந்தவித குறுக்கீடுகளையும் மேற்கொள்ளாது மனதளவில் அதற்கு ஆதரவளிக்கும் வகையில் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருந்தோம்.
ஆனால் நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது கல்முனைக்குடி ஆகிய பிரதேசங்களுக்கிடையில் நடைபெற்ற அசம்பாவிதங்களையும், அதனால் இரு ஊர்களுக்குமிடையில் உருவான பதட்ட நிலைமையினையும்,
மற்றும் அண்மைய சில நாட்களாக நடைபெற்று வருகின்ற பள்ளிவாசலின் அரசியல் நகர்வுகளையும் உற்று நோக்குகின்றபோது எந்தவொரு பகுத்தறிவுள்ள மனிதனும் சாய்ந்தமருது பள்ளிவாசலின் புத்திசாலித்தனமற்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு உடன்படமாட்டார்கள்.
சாய்ந்தமருதிலும், கல்முனைக்குடியிலும் உள்ளவர்கள் யார் ? அனைவரும் நாங்களே! “லாயிலாஹா இல்லல்லாஹ்” என்று கலிமாச்சொன்ன முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சகோதரர் என்பது மறக்கடிக்கப்பட்டு, இரு ஊரவர்களும் பரம விரோதிகள் போன்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டு வருகின்றது.
இது எமது எதிர்கால சந்ததிகளுக்கிடையில் தீராத பிரதேசவாத பகைமை உணர்வுகளை உருவாக்குவதுடன், இதேபோன்று ஏனைய பிரதேசங்களிலும் பரவக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமாக கானப்படுகின்றது.
அத்துடன் முஸ்லிம்கள் ஒரு தனியான தேசிய இனம் என்ற அந்தஸ்து அழிக்கப்பட்டு மிகவும் பலயீனமான ஒரு அனாதரவான சமுதாயமாகவும், எமது தலைவிதியை காபீர்கள் தீர்மானிக்கின்ற நிலைமை உருவாகுவதற்க்குரிய களம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இரு தினங்களுக்கு முன்பு இரா சம்பந்தனின் இல்லத்தில் கல்முனையை நான்காக பிரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் சாய்ந்தமருதுக்கான தனியான சபை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
கல்முனையில் தமிழ் முஸ்லிம் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக எதிர்வரும் 1௦ ஆம் திகதி மீண்டும் கூட உள்ளார்கள்.
எவ்வளவோ பொறுமையாக இருந்த எங்களுக்கு எதிர்வரும் சில நாட்கள் வரைக்குமாவது பொறுமை காக்காமல் திடீரென நேற்றய மாட்டுவண்டி ஊர்வலம் ஒன்றின் அவசியம் எதற்கு ? சாஹிரா கல்லூரி வீதியால் ஏன் செல்ல முற்பட வேண்டும்?
சரி அப்படித்தான் ஊர்வலம் போனாலும் சகோதர ஊரவர்களை கொச்சைப்படுத்தும் வார்த்தை பிரயோகங்கள் எதற்கு?
எனவேதான் ஒரு தூய்மையான போராட்டமாக முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சிமன்ற போராட்டமானது, தற்போது திசைமாறி பயணிக்கின்றது.
சிலரது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும், அரசியல் பளிவாங்கல்களுக்கும் ஏற்ப பள்ளி நிருவாகம் செயல்படுகின்றது.
இவ்வாறான புத்திசாலித்தனம் அற்றதும், வன்முறைகளுக்கு தூபமிடுகின்ற ஒரு நிறுவனமாக சாய்ந்தமருது பள்ளி நிருவாகம் இன்று எல்லோராலும் பார்க்கப்பட்டு வருகின்றது.
இது எமது எதிர்கால சந்ததிகளுக்கு ஆபத்தினை ஏற்படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமாக கானப்படுவதுடன், ஏனைய ஊர்களிலிருந்து சாய்ந்தமருது தனிமைப்படுத்தபடுகின்ர நிலைமை உருவாகியுள்ளது.
இதனை புத்தியுள்ள எவரும் இந்த பள்ளிவாசலின் வன்முறை அரசியலுக்கு கட்டுப்படமாட்டார்கள் என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
Comments
Post a comment