உள்ளூராட்சி தேர்த‌லை ந‌ட‌த்துவ‌த‌ற்கான‌ அனும‌தி

உள்ளூராட்சி தேர்த‌லை ந‌ட‌த்துவ‌த‌ற்கான‌ அனும‌தி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுவிட்ட‌தால் இன்று இர‌வு அல்ல‌து நாளை தேர்த‌ல் ப‌ற்றி தேர்த‌ல் ஆணையாள‌ர் அறிவிப்பார். இந்த‌ நிலையில் க‌ல்முனை த‌ற்போதுள்ள‌ நிலையில் மாந‌கர‌ ச‌பைக்கான‌ தேர்த‌லே ந‌ட‌த்த‌ப்ப‌டும் என இன்றைய‌ ஊட‌க‌ ச‌ந்திப்பின் போது அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பா தெரிவித்தார். அத்துட‌ன் சாய்ந்த‌ம‌ருது பிர‌தேச‌ ச‌பை அல்ல‌து க‌ல்முனையை நான்காக‌ பிரித்த‌ல் என்ற‌ எத‌ற்குமே சாத்திய‌ம் இல்லை என‌வும் தெரிவித்துள்ளார்.

ஆக‌வே சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ளும் க‌ல்முனை ம‌க்க‌ளும் இது விட‌ய‌த்தை புரிந்து தத்த‌ம‌து இய‌ல்பு வாழ்க்கையின் ப‌க்க‌ம் திரும்புமாறும் தேர்த‌லில் த‌ம்மை ஏமாற்றியோருக்கு பாட‌ம் ப‌டிப்பிக்க‌ முன்வ‌ருமாறும் உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

அத்துட‌ன் க‌ல்முனை சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ள் த‌ம‌து பார‌ம்ப‌ரிய‌ ஒற்றுமையை காக்கும்ப‌டியும் புரிந்துண‌ர்வுட‌ன் க‌ல்முனை தொகுதியில் இய‌ல்பு வாழ்க்கைக்கு உத‌வும் ப‌டியும் உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.
Mubarak Abdul Majeed

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

அர‌பா நாளிலேயே அற‌பா நோன்பு நோற்க‌ வேண்டும்

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்