அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
சாய்ந்தமருது" சம்பந்தனின் அலுவலகத்தில் இன்று, பைசரின் தலைமையில் பேச்சு
கல்முனை விவகாரம் தொடர்பாக தமிழ், முஸ்லிம் தலைவர்களது அடுத்தகட்ட உயர்மட்ட சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனது அலுவலகத்தில் இன்று -22- புதன்கிழமை மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.
கல்முனை உள்ளூராட்சி சபை விவகாரம் தொடர்பாக அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையிலான கூட்டம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது.
அதற்கமைய இந்த இரண்டாம் கட்டக் கூட்டம் இன்று நடைபெறவிருக்கிறது. அதனிடையில் இருதரப்பிலுமிருந்து தெரிவாகும் ஐவர் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டு வருகின்றன. தமிழர் தரப்பிலிருந்து தெரிவான ஐவர் கொண்ட குழுவின் விபரம் வருமாறு:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி., ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன், ரெலோ கட்சியின் உபதலைவரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான ஹென்றி மகேந்திரன், கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments
Post a comment