Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

சாய்ந்தமருதின் ஹீரோவாகும் வை.எம்.ஹனிபா???-எம்.வை.அமீர்-

இலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்களைக் பெரும்பான்மையைக் கொண்ட ஒரேயொரு ஊரான,கிழக்குமாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள  சாய்ந்தமருதின்,ஹீரோவாகவும் உயிர் வாழும் உமர் முக்தார் என்றும் சாய்ந்தமருதின் Godfather  என்றும் அழைக்கப்படும்81 வயதைத் தாண்டிய  வை.எம்.ஹனிபா,ஒருகாலத்தில் அரசியல்வாதிகளை தோழில் சுமந்த இளைஞர்களால் சுமக்கப்படுகிறார்.


அரசியல் ரீதியாக குரலற்ற சாய்ந்தமருது மக்களின் குரலாக,வழிகாட்டியாக மதிக்கப்படும் வை.எம்.ஹனிபாபல்வேறு கலர்களிலும்கட்சிகளிலும்,கொள்கைகளிலும் இணைந்திருந்த ஊர் மக்களை பள்ளிவாசல் என்ற ஒருகுடையின் கீழ் ஒன்று திரட்டினார்.

சாய்ந்தமருது மக்கள் அரசியல் ரீதியாகவும் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களிலும் பின்தள்ளப்படுவதாகவும்அவர்களது ஊரை ஆகக்குறைந்த அரசியல் அதிகாரம் கொண்ட தனியானதொரு உள்ளுராட்சிசபையூடாக முன்னேற்றிச்செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் இளைஞர்கள் மற்றும் ஏனையோர், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலையும் அதன் தலைவர் அல் ஹாஜ் வை.எம்.ஹனிபாவையும் முன்னிறுத்திப் போராடி வருகின்றனர்.

யார் இந்த வை.எம்.ஹனிபாஇவர் சாய்ந்தமருதில் பிரபல்யம் பெற்ற சின்ன மீராலெப்பை யாஸீன்பாவா,இஸ்மாலெப்பை பாத்திம்மா ஆகியோருக்கு பிறந்த மூன்று பிள்ளைகளில் முதலாவதாக 1937 ஆம் ஆண்டு பிறந்தவராகும்.

ஆரம்பக்கல்வியை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக்கல்வியை கல்முனை ஸாஹிரா கல்லுரியிலும் கற்ற இவர்தனது பாடசாலைப் பருவத்தில் கல்வி,விளையாட்டு,சமூகசேவை மற்றும் மார்க்க விடயங்களிலும் சிறந்து விளங்கினார்.

1959 ஆம் ஆண்டு நாச்சியாதீவு என்ற ஊரில் ஆசிரியராக நியமனத்தைப் பெற்றுக்கொண்ட ஹனிபா1996 வரை ஆசிரியர் சேவையில் இருந்து இறுதியாக கல்முனை ஸாஹிரா கல்லுரியில் பிரதி அதிபராக கடமையாற்றி ஓய்வுபெற்றார்.

1960 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட இவருக்கு மூன்று ஆண்களும் இரண்டு பெண்களுமாக ஐந்து பிள்ளைகள் உள்ளனர். சமூகத்தில் உயர் அந்தஸ்த்தில் இருக்கும் இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நிருவாகத்தில் இணைந்துகொண்டர். பின்னர் 2012 ஆம் ஆண்டு முதல் சாய்ந்தமருது மக்களால் மிகவும் மதிக்கப்படும் இந்த நிறுவனத்தின் தலைவராகவும் இன்றுவரை இருந்து வருகிறார்.

இவரது வாழ்க்கையில்மறைந்த வத்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களுடன் இணைந்துஅவரது இணைப்பாளராகவும் பணியாற்றி பல்வேறு சமூகநல திட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார்.

ஒரு அமைப்பின் தலைவர் என்ற அடிப்படையில் இவரது போக்குக்கு எதிரான கருத்துடையோர் இருக்கின்ற போதிலும் சாய்ந்தமருது மக்களை ஒன்றுதிரட்ட அவர் கையில் எடுத்துக்கொண்ட தனியான உள்ளுராட்சிசபை என்ற அந்த விடயம்அவருக்கு எதிரான கருத்துடையோரையும் அவரின்பால் ஈர்க்க வைத்துள்ளது என்றே சொல்லவேண்டியுள்ளது.

தனது ஊருக்கான தனியான உள்ளுராட்சிசபைக்காய் தள்ளாடும் வயதிலும் நாற்பது தடவைக்கு மேலாய் கொழும்புக்கும் நாட்டின் நாலாபக்கத்துக்கும் சென்று அரசியல்வாதிகளையும் சம்மந்தப்பட்டோரையும் சந்தித்து,இன்றுவரை தருகிறோம் என்ற வாக்குறுதியை மட்டுமே பெற்றுக்கொண்டு ஏமாற்றங்களை சவாலாக ஏற்றுஎன்றாவது ஒருநாள் தனது ஊர்மக்களின் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையில் போராட்டங்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் வை.எம்.ஹனிபாவின் வார்த்தைகள் மீறப்படாததாகமதிப்பு மிக்கதாக இப்பிராந்திய இளைஞர்களினதும் ஏனையோரினதும் மனங்களில் திகழ்கின்றது.

1858 ல் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் மினிபா எனும் பழங்குடியில் பிறந்த உமர் முக்தாரின் பின்னால் அந்த மக்களின் விடுதலைக்காகமக்கள் எவ்வாறு ஒன்றுதிரண்டார்களோ அவ்வாறே சாய்ந்தமருது மக்களும் இவரின் பின்னால் ஒன்றுதிரண்டதுபோன்ற பிரம்மை சாய்ந்தமருதில் நிலவுகின்றது.

கடந்த 2017-11-21 ஆம் திகதி கடற்கரை வீதியில் இடம்பெற்ற மக்கள் திரண்டிருந்த நிகழ்வுக்கு இளைஞர்களால் இவர் சுமந்து வரப்பட்ட காட்சி அப்போது அங்கிருந்தவர்கள் வெளியிட்ட உணர்வுபூர்வமான வார்த்தைப்பிரயோகங்கள் அது உமர் முக்தாரின் போராட்டத்தை ஞாபகமூட்டுவது போன்றதாக இருந்தது.

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் கூட்டங்களுக்கு மட்டுமே கூடிப்பழகிய சாய்ந்தமருது மக்கள் இப்போது இவரது வார்த்தைக்கு கட்டுப்படுகிறார்கள்,ஆமோதிக்கிறார்கள்,ஒன்றுகூடுகிறார்கள் என்றால் இதனை சாய்ந்தமருதில் புதுவித புரட்சி என்றே நோக்கவேண்டியுள்ளது.

சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளை வென்று கொள்வதற்காக தான் “சிறை செல்லவும் தயாறாய் இருக்கின்றேன்” என்ற வார்த்தைப் பிரயோகங்கள் அவரின்பால் அந்த மக்களை விசேடமாக இளைஞர்களை அபிமானம் கொள்ள வைத்துள்ளது.

நாங்கள் யாருடைய அபிலாஷைகளுக்கும் எதிரானவர்கள் அல்ல என்ற விடயமும்சகோதர ஊர் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களுடன் இணைந்தே வாழவிரும்புவதாக வெளியிடும் கருத்துக்கள் அவரது சகோதர வாஞ்சையை காட்டுவதாகவும் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் அமைகின்றன.

அல் ஹாஜ் வை.எம்.ஹனிபாவுடைய தலைமையில் கடந்த நவம்பர் முதாலம் திகதி வெளியிடப்பட்ட சாய்ந்தமருது பிரகடமானது முழு நாட்டிலும் பேசப்பட்ட ஒன்றாகும். தங்களுக்கான உள்ளுராட்சிசபை கிடைக்கும்வரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் சாய்ந்தமருதில் இடமில்லை என்ற சரத்தும் சுயட்சையாக களமிறங்குவோம் என்ற விடயமும் அரசியல் வாதிகள் மட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஒன்றாகும்.

சாய்ந்தமருது பிரகடனத்தைத் தொடர்ந்து காரைதீவு போன்ற ஊர்களிலும் பிரகடனங்கள் வெளியிடப்பட்டுள்ளது என்பது முன்மாதரியான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இவரது தலைமையில் மூன்றுநாள் கடைகளை அடைத்த விடயம் வீதிமறியல் போராட்டம் என்பன இவர்களது போராட்ட குணத்தையும் தளராத திடகாத்திரத்தையும் காட்டுகின்றது.

ஆகமொத்தத்தில் வை.எம்.ஹனிபா இப்பிராந்தியத்தின் பேசுபொருள்,கதாநாயகன். முகநூல்களில் கூறப்படுவது போன்று அவர் உயிர் வாழும் உமர் முக்தார் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத