Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

முஸ்லிம்களின் பாதுகாப்பு அரண்- அன்று அஷ்ரப் ! இன்று ரிஷாத்!!ஏ.எச். எம். பூமுதீன்

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனுக்கு இன்று (27) பிறந்த நாளாகும் (45 வயது).

  அதேவேளை,பாராளுமன்ற அரசியலில் 17வது வருடத்தில் காலடி எடுத்தும் வைக்கின்றார். இதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.

இலங்கையை பொருத்தவரை யுத்தத்திற்கு பின்னர் பல்வேறு சக்திகளால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டு வந்த சூழ்நிலையில் ,இப்போது பொது பல சேனா போன்ற பௌத்த சக்திகள் உட்பட டயஸ்போரா, இனவாத ஊடக மாபியா குழுக்கள் என பல்வேறு சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான சதித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

அதேபோல்,1990 முதல் 2009 வரை முஸ்லிம்கள் புலிகளால் கொடுமைப்படுத்தப்பட்டனர். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பல்வேறு சக்திகளிடம் இருந்து முஸ்லிம்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். புலிகள் ஏற்படுத்திய பிரச்சினைகளும் பௌத்த சக்திகள் அடங்கலான மேற்சொன்ன சக்திகளும் இணைந்து ஏற்படுத்தி வரும் பிரச்சினைகளும்  முஸ்;லிமக்களை பொறுத்தவரை பலபக்க பாதிப்புக்களாகும்.

வடக்கில் ஒரு லட்சம் முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றியும் கிழக்கில் கொன்று குவித்தும் புலிகள் 19 வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.புலிகள் 2009 இல் ஒழிக்கப்பட்டதும் முஸ்லிம்கள் பெரு மூச்சு விடத் தொடங்கினர்.

ஆனால்,வடக்கு முஸ்லிம்கள் இதற்கு விதிவிலக்காவர்கள். புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தங்கள் நிலங்களை இழந்து மீள்குடியேற முடியாமல் தவிக்கின்றனர்.அவர்களின் நிலங்கள் வேறவர்களால் அபகரிக்கப்பட்டுவிட்டன. அந்த நிலங்களுக்கு பதிலாக அரச நிலங்களைப் பெறுவதற்குக் கூட நாசகார சக்திகள் தடை விதிக்கின்றன.

இவ்வாறு யுத்த காலத்திலும் யுத்தம் முடிந்த பின்பும் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டு வரும் முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பதற்கு-அவர்கள் இழந்தவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் தலைமைகள் இதுவரை காத்திரமான நடவடிக்கைகளை எடுத்ததே இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது.

ஆனால் அவ்வாறான தலைமைகளுள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மாத்திரமே விதிவிலக்காக உள்ளார். வடக்கு முஸ்லிம்கள் 1990 களில் வெளியேற்றப்பட்ட போது தானும் அம்மக்களுடன் சேர்ந்து வெளியேறினார். அகதிகளுள் ஒருவரான அவர் அன்று அம்மக்களின் அவல வாழ்க்கையை நினைத்து கண்ணீர் விட்டார்.

அந்த அவல வாழ்க்கையை இல்லாதொழித்து தன் சமூகத்தின் பழைய வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்ய வேண்டும் என்று மிகத் தீவிரமாக யோசித்தார். அதன் பலனாகவே அவர் அரசியலுக்குள் நுழைந்தார்.

சொந்த நிலங்களையும் அனைத்து சொத்துக்களையும் இழந்து முழுமையாக அகதிகளாக மாறியுள்ள முஸ்லிம்களுக்கு அர்த்தபுஸ்டியான செயற்பாடுகளை செய்யாவிட்டால் வடக்கு முஸ்லிம்கள் என்றென்றும் நிரந்தர அகதிகளாக - மீள முடியாத - மிகவும் பின் தங்கிய சமூகமாகவே வாழ வேண்டி வரும் என்பதையும் நன்கு உணர்ந்ததால் அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளைப் பெற்று அந்த மக்களின் விடிவுக்காக களம் குதித்தார்.

தம் மக்களின் அவலத்தை போக்க எப்படிப்பட்ட அமைச்சு தேவையோ அப்படிப்பட்ட அமைச்சை அவர் கேட்டுப் பெற்றுக் கொண்டார். அந்த அடிப்படையில் அவருக்கு முதலில் வன்னி புனர்வாழ்வு அமைச்சு வழங்கப்பட்டது.

அதன் பிறகு மீள்குடியேற்ற அமைச்சு வழங்கப்பட்டது. தற்போது வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சராக இருந்து அவரது சேவை தொடர்கிறது. மேற்படி மூன்று அமைச்சுகளின் ஊடாக தன்னால் முடிந்த அளவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை செய்துள்ளார்;, செய்து கொண்டும் வருகிறார்.

மீண்டும் மீள்குடியேற்ற அமைச்சை இந்த நல்லாட்சி அரசில் கோரிநின்ற போதிலும் முன்னர் கூறியதை போன்று டயஸ்போராவின் கட்டளைக்கு ஏற்ப தமிழ் கூட்டமைப்பின் இரும்பு பிடிக்குள் இந்த அரசு உட்பட்டு அந்த அமைச்சை வழங்க மறுத்துவிட்டது.

தற்போது இருக்கின்ற முஸ்லிம் தலைமைகளுடன் ஒப்பிடுகையில் ரிசாட் பதியுதீனின் மக்கள் சேவை அபாரமானது. மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசமாகும்.

வடக்கு முஸ்லிம்கள் மட்டுமன்றி நாடு பூராகவும் உள்ள மூவின மக்களும்  இதை மறுப்பதற்கில்லை. அவருக்கு வாக்களிக்க மறுக்கின்ற முஸ்லிம்கள் கூட இதை ஏற்கத்தான் செய்கின்றனர். யுத்தம் முடிந்ததன் பின்னர் சொற்ப எண்ணிக்கையிலான முஸ்லிம்களே மீள்குடியேறியுள்ளபோதிலும் அவர்கள் சமூக விரோத சக்திகளால் தமிழ், முஸ்லிம் மக்களிடையே நிரந்தர பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு அவ்வப்போது கொடுமைகளுக்கு உற்படுத்தப்படுகின்றனர். அவற்றில் இருந்து முஸ்லிம்களைப் பாதுகாத்து ஒரு பாதுகாப்பு அரணாக ரிசாத் பதியுதீன் திகழ்கின்றார் என்ற உண்மையை எவராலும் மறுக்க முடியாது.

தன் இன மக்களின் விடிவுக்காக தனது வாழ்வை அவர் அர்ப்பணித்துள்ள போதிலும் வடக்குத் தமிழ் மக்களைக் கூட அவர் மறந்ததில்லை. வேலை வாய்ப்புகள் முதல் பல தரப்பட்ட சேவைகளை அவர் தமிழ் மக்களுக்கு செய்து வருகின்றார்.

தமிழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்க பாடுபடும் சில சக்திகளின் செயற்பாடுகள் இச்சேவைகளுக்கு முட்டுக் கடையாக இருக்கின்ற போதிலும்,அவற்றை எல்லாம் தகர்த்தெறிந்து தமிழ் மக்களுக்கு சிறந்த சேவையற்றி வருகின்றார்.

ஒரே நாளில் 500 பேருக்கு ஆசிரியர் நியமனம், பல்லாயிரம் வேலை வாய்ப்புக்கள்,10,000 நிரந்தர வீடமைப்பு, அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் என்பன அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கனமான சேவைகளுக்கு சில உதாரணங்களாக இவற்றை கூற முடியும்.

2009 இற்கு முன்பு , 2009 இற்கு பின்பு என்ற ரீதியில் வன்னி அபிவிருத்தியை நோக்கும் போது கடந்த எட்டு வருடங்களில் வன்னி மாவட்டம் கண்டுள்ள அபிவிருத்தி சொல்லிலடங்காதது. இதற்கு காரணமாக அமைந்தது அமைச்சர் ரிசாத் பதியுதீன் என்ற ஆளுமை மிக்க அரசியல் தலைவர் வன்னி மாவட்டத்திற்கு கிடைத்தமையாகும்.

இன்று இந்த தலைமையை இல்லாதொழித்து வன்னி மாவட்டத்தையும் வடமாகாண முஸ்லிம்களையும் மற்றும் நாடுபூராகவுமுள்ள முஸ்லிம்களையும் இருண்ட யுகத்திற்குள் தள்ளிவிட சில இன மதவாம் பிடித்தவர்களும் அவர்களின் அற்ப சொற்ப சலுகைகளுக்கு அடிபணிந்த ஓர் இரு சமுகத்துரோகிகளும் தொடர்ச்சியாக துணைபோய்க் கொண்டிருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தையே வேதனைக்குட்படுத்தியுள்ளது.

வடக்கு மக்களுக்கு மாத்திரம்தான் தனது சேவைகள் என குறுகிய மனப்பான்மையில் இருக்காது நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் அவரது சேவைகள் சென்றடைகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பல அபிவிருத்திகளை இவர் செய்துள்ளார். செய்தும் வருகின்றார். அம்பாறை மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் கிடைக்காவிட்டாலும் கூட அந்த மக்களின் விடிவுக்காக பல அரச உயர் பதவிகளையும் தொழில் வாய்ப்புக்களையும் அபிவிருத்திக்கான நிதிகளையும் வழங்கியுள்ளார். இது அவரின் பரந்த மனதையே வெளிப்படுத்துகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் அவர் மிக சிறந்த சேவைகளை வழங்கி வருகின்றார்.அவரது கட்சியில் இன்று அரசியல் பிரதிநித்துவங்கள் கணிசமாக அதிகரித்து காணப்படுகின்றன.

நாட்டில் இன்று தலைதூக்கியுள்ள இனவாத, மதவாத சதிகாரக் கும்பல்களுக்கு எதிராக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தன்னந்தனியே நின்று போராடி முஸ்லிம் சமுகத்தை பாதுகாக்கும் ஒரு தேசியத் தலைவராக உருப்பெற்றுள்ளார். பௌத்த இனவாத சக்திகளின் அடாவடித்தனங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரே நபராக இவர் இருக்கின்றார். நாட்டின் எப்பாகத்திலும் முஸ்லிம்களுக்கு ஆபத்து என்றால் அந்த இடத்தில் ரிசாத் பதியுதீனின் குரல் ஓங்கி ஒலிக்கும்.

ரிசாத் என்றால் குலை நடுங்குபவர்களாக பௌத்த இனவாதிகள் உள்ளனர். அந்தளவு இவரின் நகர்வுகள் அமைந்து வருகின்றன.

பொதுபலசேனா என்ற இனவாத கும்பல்களின் அச்சுறுத்தல் , அடாவடித்தனங்கள் என்பவற்றையெல்லாம் எதிர்கொண்டு தனது சமுகத்தை முன்னிறுத்தி போராடி வருகின்றார். இந்த இனவாதக் கும்பல்களுக்கெதிராக குரல் கொடுத்தமைக்காக இன்று நீதிமன்றங்களின் முன்னால் கைகட்டி நிற்கும் ஒரே முஸ்லிம் தலைமை என்றால் அது ரிசாத் பதியுதீன் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் குரலை நசுக்கிவிட்டால் அல்லது அவரது அரசியல் வாழ்வை இல்லாதது பொல்லாததும் கூறி அழித்து விட்டால் சமூகத்தை தாம் நினைத்தமாதிரி பந்தாடலாம் என்ற பல்துறைசார் சதிகாரர்களின் சதித்திட்டம் அரங்கேறும் வேளையில்தான் அவர் இன்று பதினேழு வருட அரசியலை நிறைவும் செய்கின்றார்.

அன்று- எம்.எச்,எம். அஷ்ரப், இந்த முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பு அரணாக 10 வருடங்கள் இருந்து ஆற்றிய பங்களிப்பை , இன்று அல்லாஹ் ரிஷாத் என்ற துணிச்சல் மிக்க மாவீரனைக் கொண்டு பாதுகாக்க முயற்சி எடுத்து உறுதுணையாக இருந்து வருகின்றான்.

17 வருட பாராளுமன்ற அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்துள்ள அமைச்சர் ரிசாதின்  அரசியல் வாழ்க்கை எமக்கு உணர்த்துவது எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்கக்கூடிய ஒரேயொரு முஸ்லீம் தலைவர் என்ற நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதைத்தான்.

அவரது சமூக உணர்வு மேலும் அதிகரித்து ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் அவர் தலைமை தாங்க வேண்டும்;. முஸ்லிம்களின் ஏக தலைவராக மாற வேண்டும். அந்த நிலையை அடைகின்றபோதுதான் முஸ்லிம்களுக்கு விடிவு கிட்டும். அந்த நிலை மிக விரைவில் ஏற்பட வேண்டும் என்று 17 வருட பாராளுமன்ற  வாழ்க்கையையும் இன்று தனது 45 ஆவது வயதையும் நிறைவு செய்யும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்காக நாம் அனைவரும் இச் சந்தர்ப்பத்தில் பிரார்த்திப்போம்.

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத