கம்பஹா முச்சக்கர வண்டிகளுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

( மினுவாங்கொடை நிருபர் )

   கம்பஹா வட்டார எல்லைக்குள் சேவையில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும்  அவசர தொலைபேசி இலக்கங்கள் பொறிக்கப்பட்ட "ஸ்டிக்கர்கள்" ஒட்டும் முதற்கட்ட நடவடிக்கைகள், கம்பஹா நகரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கம்பஹா பிரதான பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 
   கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முதித்த புஸ்ஸெல்ல, கம்பஹா தலைமையக பிரதான பொலிஸ் பரீட்சகர் லக்ஷ்மன் பண்டார ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், இத்திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, கம்பஹா பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 
   கம்பஹா பொலிஸ் பிரதேசத்தில் ஏதாவது ஒரு இடத்தில் குற்றச் செயல்கள் மறைமுகமாக இடம்பெற்றால் அல்லது சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் எங்காவது ஒரு பிரதேசத்தில் தென்பட்டால், "ஸ்டிக்கர்களில்" பொறிக்கப்பட்டுள்ள குறித்த அவசர தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு, சகல தகவல்களையும்  பொதுமக்கள் வழங்க முடியும் என்றும், இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 
   முச்சக்கர வண்டி "ஸ்டிக்கர்களில்" - 033 2222226 / 033 3723996 / கம்பஹா தலைமையக பிரதான பொலிஸ் பரீட்சகர் - 071 8591611 / உதவி பொலிஸ் அதிகாரி - 071 8591610 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Comments

popular posts

சீதனம். ஹறாமானதா? முபாறக் மௌலவியின் விளக்கம்.

அர‌பா நாளிலேயே அற‌பா நோன்பு நோற்க‌ வேண்டும்

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்