எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
சாய்ந்தமருது விடயத்தில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை கொடுக்க வேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சொல்வது ஆடு நனைகின்றதே என ஓநாய் அழுவது போன்றதாகும்.
எதிரியின் ஒரு கையை களட்டுவது என்றால் அந்த எதிரிக்கு எதிரி சந்தோசப்படத்தான் செய்வான். சாய்ந்தமருதை களட்டி விடுவதன் மூலம் கல்முனை முஸ்லிம் சமூகத்தில் ஒரு கை களருவதை நிச்சயம் தமிழ் கூட்டமைப்பு சந்தோசமாகவே பார்க்கும்.
எம்மை பொறுத்தவரை சாய்ந்தமருதை அபிவிருத்தி செய்யாத முஸ்லிம் காங்கிரசை அம்மக்கள் ஒதுக்கி எப்போதோ பிரதேச சபையை வென்றிருக்கலாம். ஆனால் இப்போது சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை என்பது அவ்வூருக்கான அதிகாரம் என்பதற்கப்பால் ஊர் வாதமாக மாறிவிட்டதால் இது விடயத்தில் எமது கருத்துக்களை மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.
சாய்ந்தமருது சபை விடயத்தில் அம்மக்கள் தமது வாக்குப்பெற்ற முஸ்லிம் காங்கிரசிடமே போராடியிருக்க வேண்டும். முடியாது போனால் சாய்ந்தமருது மக்கள் ஒற்றுமைப்பட்டு ஏதாவதொரு தேர்தலில் மு. காவை தோற்கடித்து காட்ட வேண்டும் என்பதையே நாம் சொல்லி வருகிறோம்.
சாய்ந்தமருது விடயத்தில் அவ்வூர் பள்ளிவாசல் முஸ்லிம்களை கொன்றொழித்த தமிழ் கூட்டமைப்பு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனிடமும் முஸ்லிம் சமூகத்துரோகிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடமும் உதவி கேட்டமை வரலாற்று துரோகமாகும். இதே தசவறைத்தான் கல்முனைத்தொகுதி முஸ்லிம் சமூகம் 90ம் ஆண்டும் செய்தது. அப்போது முஸ்லிம் சமூகத்துள் இருந்த அரசியல் கட்சிகளின் மோதலுக்காய் புலிகளிடம் சில முஸ்லிம்கள் நீதி கேட்டதால் அவர்கள் இதனை ஒரு சாட்டாக வைத்து கல்முனை மற்றும் சாய்ந்தமருது முஸ்லிம் வாலிபர்களை பிடித்துச்சென்றார்கள். அவர்களில் பலருக்கு இன்று வரை என்ன நடந்தது என்று தெரியாத நிலை. இதே போன்றதொரு வரலாற்று பிழையை சாய்ந்தமருது பள்ளிவாயல் செய்துள்ளது.
ஆகவே கோடீஸ்வரனிடமும் சம்பந்தனிடமும் உதவி கேட்டமைக்காக சாய்ந்தமருது பள்ளிவாயல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன் இது விடயத்தில் எவ்வாறு பாதிப்பின்றி சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை வெல்வது என்பது பற்றி கல்முனை மற்றும் சய்ந்தமருது பள்ளிவாயல்களும் பிரதேச அரசியல் கட்சிகளும் இரண்டு ஊரும் தவிர்ந்த பொதுவான ஊரில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் உலமா கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
Comments
Post a comment