முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
கல்முனை எல்லைகளை பிரித்தல், தீர்மானமின்றி முடிவடைந்த கூட்டம்
-Ashraff A Samad -
கல்முனை 4 சபைகளாக பிரிப்பது உறுதியாகிவிட்டது.தற்பொழுது நடைபெறும் பிரச்சினைகள் எல்லைப்பிரச்சினைகளாகும் - கல்முனை வடக்கு - தமிழா் பிரதேசம் கல்முனை முஸ்லீம் பிரதேசம். , - கல்முனை நகரம் ஆகிய எல்லைப் பிர்சினைகளே நடைபெற்று வருகின்றன. இப் பிரச்சினை சம்பந்தமாக (22) பி.பகல் 05.00 -07.00 மணிவரை எதிா்க்கட்சித் தலைவா் இரா சம்பந்தன் அவா்களின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எவ்வித தீா்மாணம் எட்டவில்லை-
மீண்டும் டிசம்பா் 10ஆம் திகதி இதே அரசியல் தலைவா்களுடன் கல்முனை பள்ளிவாசல் சம்மேளனம். தமிழா் மகா சபை பிரநிதிகள் ஒன்று கூடவுள்ளனா். தமிழா்கள் கல்முனை நகரம் எல்லை சம்பந்்தமான அவா்களது அறிக்கை அமைசச்ா ஹக்கீடமும் கையளிக்கப்பட்டது.முஸ்லீம்களது எல்லைகள் அறிக்கை இராசம்பந்தனிடம் இன்று கையளிக்கப்பட்டது. இன்றைய சந்திப்பில் அமைச்சா் ரவுப் ஹக்கீம்,எதிா்கட்சித் தலைவா் இராசம்பந்தன் பிரதியமைச்சா் எச்.எம் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பிணா்காளான சுமந்திரன், கோடிஸ்வரன் தேசிய காங்கிரஸ் தலைவா் ஏ.எல்.எம் அதாவுல்லா, தேசிய ஜக்கிய முன்னித் தலைவா் அசாத் சாலி வை.எம்.எ தலைவா் நபீல் ஆகியோறும் கலந்து கொண்டனா்.
Comments
Post a comment