அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
மௌலவிமார் உலமா கட்சியுடன் இணைந்து அதனை அரசியல் ரீதியாக பலப்படுத்தாத வரை மௌலவி ஆசிரிய நியமனத்தை விரைவில் எதிர் பார்க்க முடியாது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
கட்சித்தலைமையகத்தில் நடை பெற்ற மௌலவிமார்களுடனான சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,
1992ம் ஆண்டுக்குப்பின் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமல் இருந்த போது அந்நியமனத்தை வழங்கும் படி பல அரசியல் சார்பற்ற அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தும் நியமனம் வழங்கப்படவில்லை. 94ம் ஆண்டு முதல் 2000ம் வரை முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் இந்நியமனம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 2005ம் ஆண்டு உருவான உலமா கட்சி அதே ஆண்டில் நடை பெற்ற ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாயின் மௌலவி ஆசிரிய நியமனம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்தது. இதுதான் இலங்கை வரலாற்றில் ஒரு முஸ்லிம் கட்சி மௌலவி ஆசிரிய நியமனம் பற்றி ஜனாதிபதி வேட்பாளருடன் செய்த முதலாவது ஒப்பந்தமாகும். ஆனாலும் அதன் பின்னரும் மௌலவிமார் பாரிய அளவில் உலமா கட்சியை பலப்படுத்தாத்தால் நியமனம் தாமதமானது.
இதன் காரணமாக 2007ம் ஆண்டு உலமா கட்சியினால் மௌலவி ஆசிரிய நியமன ஒப்பந்தத்தை வலியுறுத்தி கல்முனையில் நூற்றுக்கணக்கான மௌலவிமாரின் பங்கு பற்றுதலுடன் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. இதுதான் இலங்கை வரலாற்றில் மௌலவிமார் மேற்கொண்ட முதலாவது ஆர்ப்பாட்டமாகும்.
அதன் பின் 2008 கிழக்கு மாகாண தேர்தலை வைத்து மீண்டும் உலமா கட்சி அரசுடன் பேசியதால் அரசு இதற்கான வர்த்தமாணியை பிரசுரித்தது. இதற்காக அ.இ. முஸ்லிம் கல்வி மாநாடு, முஸ்லிம் மீடியா போரம் என்பனவற்றுடனும் உலமா கட்சி இணைந்து போராடியது.
அதன் படி 2010ம் ஆண்டு 150 மௌலவிமாருக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. ஆயினும் மௌலவிமார்கள் நன்றி கெட்டவர்களாக நடந்து கொண்டார்கள். நியமனம் பெற்ற மௌலவிமாரில் ஒருவரை தவிர வேறு எவரும் உலமா கட்சிக்கு நன்றிக்கடிதம் அனுப்பவில்லை. அத்துடன் இது அரசாங்கம் தானாக தந்த நியமனம் என பலரும் கூறினர்.
இதனால் விரக்தியுற்ற உலமா கட்சி முடிந்தால் நாம் இன்றி நீங்கள் பெற்றுக்காட்டுங்கள் எனக்கூறி நாம் அமைதியானோம். அதன் பின் இந்நியமனம் வழங்கப்படவுமில்லை அதற்காக எம்மோடு இணைந்து போராட மௌலவிமார் வரவுமில்லை. இதனால் இந்த ஏழு வருடங்களாக இந்நியமனம் வழங்கப்படாமல் மௌலவிமார் அரசியல்வாதிகளாலும் அரசியல் சார்பற்ற அமைப்புக்களாலும் பந்தாடப்படுகிறார்கள்.
ஆகவே அரசாங்கம் அரசியல் ரீதியிலான போராட்டங்களுக்கே அடிபணியும் என்ற உண்மையை மௌலவிமார் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சியொன்றின் பின் புலம் இல்லாத மக்கள் போராட்டங்கள் பெரும்பாலும் வெற்றியடைவதில்லை. எனவே மௌலவி ஆசிரிய நியமனம் பெற்ற மௌலவிமாரும் அதனை எதிர் பார்க்கும் மௌலவி மற்றும் மௌலவியாக்களும் உலமா கட்சியில் இணைந்து அதனை பலப்படுத்துவதன் மூலம் இதனை அரசியல் மயப்படுத்தி விரைவில் வெல்ல முடியும் என்ற யதார்த்ததை புரிய வேண்டும்.
அதே போல் பள்ளிவாசல்களுக்கும் இதில் பொறுப்புள்ளதால் எமது இந்தக்கூற்றை பள்ளிவாசல்களில் வாசித்து மௌலவிமாருக்கு தெளிவூட்ட வேண்டும். இல்லாவிட்டால் அறபு, இஸ்லாம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லாமை காரணமாக அரச பாடசாலை முஸ்லிம் மாணவர்கள் மாற்று மத பாடங்களை எடுப்பதை தடுக்க முடியாது போய் விடும். இதற்கான பொறுப்பை நாளை மறுமையில் உலமா சபைகளும் பள்ளிவாயல்களும் இறைவன் முன்னிலையில் ஏற்க வேண்டி வரும் என்பதை எச்சரிக்கிறோம்.
Comments
Post a comment