எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
சுஐப் எம்.
காசிம்.
புதிய அரசியல்
யாப்பின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் முதுகின் மீது நிரந்தரமான அடிமைச் சாசனமொன்று
எழுதப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன்
தெரிவித்தார்.
பெண் எழுத்தாளர்
எஸ்.யு. கமர்ஜான் பீபி எழுதிய 'நான் மூச்சயர்ந்த போது' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா வத்தளை ஹூணுப்பிட்டி சாஹிரா மகா
வித்தியாலயத்தில் நேற்று (11)நடைபெற்ற போது அமைச்சர் றிஷாத் பிரதம
விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்த அச்சத்தை வெளியிட்டார்.
முஸ்லிம் மீடியா
போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம் பெற்ற இந்த நூல் வெளியீட்டு
விழாவில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசனலி கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு
உரையாற்றினார். கவிதை நூலின் ஆய்வுரையை சட்டத்தரணி மர்சூம் மௌலானா நிகழ்த்தியதுடன்
நூலின் முதல் பிரதியை தேசமான்ய கையூம் பெற்றுக் கொண்டார். மேல் மாகாண சபை உறுப்பினர்
பாயிஸூ அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டார்.
அமைச்சர் றிஷாத்
மேலும் கூறியதாவது:
தேர்தல் முறை
மாற்றம், புதிய யாப்பு உருவாக்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஆகிய மூன்று விடயங்களும் முஸ்லிம்
சமூகத்தைப் பொறுத்தளவில் பாதிப்பான, ஆபத்தான
நிலையையே ஏற்படுத்தும் என நாம் கருதுகிறோம்.
நிறைவேற்று
ஜனாதிபதி முறையை மாற்றி சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை செல்லாக்காசாக
மாற்றுவதற்கான முயற்சி மிக வேகமாக நடந்தேறி வருகின்றது. அத்துடன் கடந்த காலங்களில்
பாராளுமன்ற முறைகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் போல, மீண்டும் இந்த முறையில்
மாற்றத்தை
ஏற்படுத்துவற்காக தேர்தல் முறையை மறுசீரமைக்க வேண்டுமென அரசு வரிந்து கட்டிக்
கொண்டு நிற்கின்றது.
முஸ்லிம்
சமூகத்தினது பாரிய பங்களிப்பினாலும் பல்வேறு அர்ப்பணிப்புக்களினாலும் நாம் விரும்பி உருவாக்கிய நாட்டுத் தலைமைகள்
இவ்வாறான புதிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதனால், அதன் மூலம் நமக்கு வரப்போகும் ஆபத்துக்கள் குறித்து நாம் கண்திறந்து
பார்க்காமல் கண்மூடித்தனமாகவே இருக்கின்றோம்.
சிறிய சிறிய
பிரச்சினைகளுக்காக ஊருக்கு ஊர், பிரதேசத்துக்குப் பிரதேசம் ஏட்டிக்குப்
போட்டியாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றோமேயொழுpய நமக்கு முன்னே வந்து நிற்கும் ஆபத்துக்கள் தொடர்பில் எந்தவிதமான
அக்கறையும் காட்டாமல் இருப்பது தான் வேதனையானது.
அறிவுள்ள,
ஆற்றலுள்ள, பணபலமுள்ள சமூகமாக முஸ்லிம் சமூகம் பார்க்கப்படுகின்ற போதும்
இவ்வாறான விடயங்களில் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது துரதிஷ்டமானதே.
சிறிய கட்சியின்
தலைவன் என்ற வகையிலும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த கட்சியொன்றின் பொறுப்பாளன்
என்ற வகையிலும் நாம் மிகவும் நொந்து போய் இருந்தாலும் இந்த ஆபத்துக்களை எவ்வாறு
முறியடித்து, சமூகம் சார் வெற்றிகளை தக்க வைத்துக்
கொள்ள முடியும் என்ற அதீத முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்.
ஆட்சியாளர்களுக்கு
எதிராக சிங்கள இளைஞர்களும் தமிழ் இளைஞர்களும் ஆயுதமேந்திய போதும் முஸ்லிம்கள்
அமைதியாகவே வாழ்ந்தனர். ஜனநாயக வழியையே தேர்ந்தெடுத்தனர். நமது அரசியல்
முன்னோடிகள் கற்றுத்தந்த வழிமுறைகளை பின்பற்றியே ஆட்சியாளர்களுடன் எப்போதும்
ஒத்துழைத்து வந்தனர், வருகின்றனர். இந்த யதார்த்தத்ததை
அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்ச்
சகோதரர்கள் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அரசியல் தீர்வு ஒன்றை தேடி நிற்கும்
பின்னணியிலும், அந்த கோரிக்கையை எவ்வாறு
நிறைவேற்றுவதென்ற ஆழமான சிந்தனையில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வரும்
சூழ்நிலையிலும் முஸ்லிம்களின் சவால்களை வென்றெடுக்க வேண்டிய நிலை நமக்கு
நேரிட்டுள்ளது.
கல்வி, பொருளாதார, வாழ்வாதார மற்றும் மீள்குடியேற்ற
பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் எமது கட்சி பல கட்டமைப்புக்களை வைத்துக் கொண்டு
நேர்மையுடன் முன்னெடுத்துச் செல்கின்றது. எனினும் இந்த பயணத்தை தடுப்பதற்காக பல
முனைகளிலும் அம்புகள் எய்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சமுதாயம் சார்ந்தவர்களின்
அம்புகளும் சிங்களப் பேரினவாதிகளின் அம்புகளும், தமிழ்ப் பேரினவாதிகளின் அம்புகளும் வௌ;வேறு வடிவங்களில் பல்வேறு கோணங்களில் இருந்தும் நமக்கு எறியப்பட்ட
போதும் இறைவனின் உதவியினால் அவற்றையெல்லாம் முறியடித்துக் கொண்டு முன்னேறும்
சக்தியை இறைவன் தந்துள்ளான்.
சமூகத்துக்கு
நேர்ந்துள்ள ஆபத்துக்களை வெளியில் பேசினால் 'ஆட்சியை தொலைக்கப்பார்க்கிறார்', 'முன்னைய ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு விட்டார்', 'நல்லாட்சியை வீட்டுக்கு அனுப்ப துடிக்கின்றார்' என்றெல்லாம் கதையளந்து எமது குரல்வளையை நசுக்குவதற்கு
எத்தனிக்கின்றனர்.
அரசியல் சூனியம்
கொண்ட, கட்சிவெறிபிடித்த சின்னங்களை மதங்களாகப்
பார்க்கும் நம்மவர்களில் சிலர் இவ்வாறு எறிகணைகளை வீசுகின்ற போதும் அவற்றையெல்லாம்
தாங்கிக் கொண்டும் தடைகளைத் தாண்டிக் கொண்டும் நேர்மையாகப் பயணிக்கின்றோம் என்று
கூறினார்.
பொதுவாக
முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் நமது சமூகத்தில் அரிதாகவே காணப்படுகின்ற போதும்
இவ்வாறான எழுத்து முயற்சிகளை மேற்கொள்ளும் பெண் எழுத்தாளர்களுக்கு நாம் உந்து
சக்தியாக இருக்க வேண்டும். அரசியல் ஆய்வாளரும் சிறந்த எழுத்தாளருமான நூருல் ஹக்
அவர்களின் துணைவியான கமர்ஜான் பீpவி எழுதிய இந்த கவிதை நூல் சமூக
மாற்றத்துக்கு வித்திடும் என நான் நம்புகின்றேன். இவ்வாறு அமைச்சர் மேலும் கூறினார்.
Comments
Post a comment