எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
இலங்கை டுபாய் தூதுவரின் நல்ல மனசு, 15 பேருக்கு ஒரேநேரத்தில் திருமணம்
கொழும்பு வாழ் பிரதேசங்களைச் சோ்ந்த 15 இளம் முஸ்லீம் ஜோடிகள் நேற்று(25) இரவு திருமண பந்தங்களில் இணைந்து கொண்டனா். திருமணங்கள் பெற்றோா்கள் நிச்சயித்தும் அதனை நடாத்தி முடிக்க முடியாத 15 ஜோடிகளை அமைச்சா் பௌசி இனம் கண்டு அவா்களுக்கான திருமணங்களை முடித்து வைப்பதற்கு திட்டமொன்றை வகுத்தாா். ஒரே மேடையில் அமைச்சா் பௌசி மற்றும் துபாய் துாதுவா் முன்னிலையில் ஒரே மேடையில் இத் திருமணங்கள் நடைபெற்றது.
இத் திட்டத்திற்காக இலங்கையில் உள்ள துபாய் நாட்டின் துாதுவா் அல் முல்லாஹ் அவா்கள் அனுசரனை வழங்கி ஒவ்வொரு ஜோடிக்கும் 2 இலட்சம் ருபா செலவில் 15 ஜோடிகளை தமது நிதியில் தாலி மற்றும் தளபாடம், பணம், அத்துடன் மெரைன் ரைவ கோட்டலில் சகல ஜோடிகளது குடும்பங்களுக்கு இராப்போசனம் வழங்கி திருமனம் ஒரே மேடையில் நடைபெற்றது.
Comments
Post a comment