எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
இலங்கையில் இஸ்லாமிய, பயங்கரவாதிகளின் ஆயுதங்கள், எம்மை கொல்ல வாய்ப்புகள் உள்ளன - ஞானசார சர்வதேச நாடுகளின் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் இலங்கைக்குள் வந்துள்ளன, இலங்கையில் கைத்துப்பாக்கிக்கு அனுமதியில்லாத நிலையில் சினைப்பர் ரகத்திலான துப்பாக்கி எவ்வாறு முஸ்லிம் நபரின் கைகளுக்கு கிடைத்தது என பொதுபல சேனா பெளத்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பினர். எம்மை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது என்னும் அவர் குறிப்பிட் டார். பொதுபல சேனா பெளத்த அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்ற போது கருத்தினை அவர் குறிப்பிட்டார். இது குறித்து மேலும் கூறியதாவது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளிநாட்டில் இருந்து மிகவும் பயங்கரமான சினைப்பர் ரக (gv15/2213) இயந்திர துப்பாக்கி ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு முஸ்லிம் நபர் ஒருவரே இந்த துப்பாக்கியை பெற்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த சகல தகவல்களும் எம்மிடம் ஆதாரத்துடன் உள்ளன. அதேபோல் குறித்த