ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
අතිගරු ජනාධිපති මෛතී්රපාල සිරිසේන මහතා සමග නිල සංචාරයක් ර්සදහා කටාර් රාජ්ය වෙත පෙමිණි අමාත්ය ෆයිසර් මුස්තෆා මහතා උත්සවයකට සහභාගිවීමට පෙර මල් කිතිත්තක් පර්ලදවන අයුරු.
ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களுடன் கடார் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களை நிகழ்கவொன்றுக்கு பங்குபற்றும் முன் மலர்ச்செண்டு அணிவித்து வரவேற்கும் காட்சி.
Comments
Post a comment