பின்னோக்கி ஓடுதல் போட்டியில் டாக்டர் ஆரீப் தங்கம் வென்றார்!!


-எம்.வை.அமீர், யூ.கே.காலித்தீன்-
கிழக்குமாகாண மற்றும் பிராந்திய சுகாதார பணிமனைகள் இணைந்து நடாத்திய வருடாந்த விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பு இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த சனி ஞாயிறு தினங்களில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் எம்.சி.பைசல் காஸீமும் கௌரவ அதிதியாக மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எஸ்.எம்.அன்சாரும் கலந்து கொண்டனர்.
இங்கு இடம்பெற்ற 40 வயதுக்கு மேற்பட்ட பின்னோக்கி ஓடுதல் போட்டியில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்று நோய்ப் பிரிவின் பொறுப்பு வைத்தியர்  வைத்திய கலாநிதி என்.ஆரீப் தங்கப் பதக்கம் வென்று கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்