ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
(முகம்மட் சஜீ)
காத்தான்குடி குபா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘குபா வெற்றிக்கிண்ண’ பரிசளிப்பு விழா மற்றும் விளையாட்டுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
காத்தான்குடி அல் ஹிறா வித்தியாலய மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, தனது 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியெதுக்கீட்டில் இருந்து குபா விளையாட்டுக் கழகத்துக்கான விளையாட்டு உபகரணங்களை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார். அத்துடன், குபா வெற்றிக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற குபா மற்றும் விக்டரி அணிகளுக்கான கிண்ணத்தை பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தமைக் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment