நஞ்சற்ற நாடு செயற்திட்டம்- அமைச்சர் பைஸர் முஸ்தபா ஏற்பாடு

( மினுவாங்கொடை நிருபர் )

   ஜனாதிபதி செயலகத்தினால் அமுல்படுத்தப்படும் "நஞ்சற்ற நாட்டினைக் கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப் பொருளிலான செயற்திட்டம், நாடளாவிய ரீதியல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் ஒழுங்கு செய்திருந்த "தேசிய உணவு பாதுகாப்பு  செயற்திட்டம்" தொடர்பிலான  நிகழ்வொன்று, (06) வெள்ளிக்கிழமையன்று, அமைச்சின் முற்ற வெளியில் இடம்பெற்றது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, "நஞ்சற்ற பாதுகாப்பான உணவு உற்பத்தியின் நன்மைகள் மற்றும் அதன்  முக்கியத்துவங்கள் பற்றியும், அதன் மூலமாகவே எதிர் காலப் பரம்பரைக்கு ஒரு சுகாதாரமான, நஞ்சற்ற, சிறந்த நாடொன்றினைக் கட்டியெழுப்ப முடியும்" எனும் தொனிப் பொருளில்,  இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்தார். அமைச்சர் மரக் கன்றுகளையும் இதன்போது நட்டிவைத்தார். இந்நிகழ்வில், அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, மேலதிக செயலாளர் ( நிர்வாகம்/நிதி ) நயனா நாத்தவிதாரண, மேலதிக செயலாளர் ( அபிவிருத்தி ) எம். நயிமுதீன் உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். 

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்