Skip to main content

ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு

  ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு   புதிய பதவி நிலைகளை   நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க  உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர்  உதவித் தலைவராக  ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ்  கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க   புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க  பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க  வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே  தவிசாளராக  அங்கீகரிக்கப்பட்டுள்ளார்,  ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே  ஐ.தே.க  தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.

சபை இன்றேல் கட்சிகளுக்கு கடையடைப்பு!!!

சபை இன்றேல் கட்சிகளுக்கு கடையடைப்பு!!!
சாய்ந்தமருதில் தீர்மானம்

(அஸ்லம் எஸ்.மௌலானாஎம்.வை.அமீர்யூ.கே.காலீத்தீன்)

சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் அபிலாஷையான தனியான உள்ளுராட்சிசபையை பெற்றுத்தருவதில் இந்தமக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகளும் கட்சிகளும் அசமந்தபோக்கைக் கடைப்பிடிப்பதால் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை கிடைக்கும்வரை அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் புறக்கணிப்பது என சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் 2017-10-24 ஆம் திகதி மாலை மிகப்பரபரப்புடன் கூடிய, மரைக்காயர் சபையினர்,பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள்  மற்றும் ஊர்ப்பிரமுகர்களால் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உள்ளுராட்சிசபை விடயமாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களால் பகிரங்க வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இந்த மக்களின் நியாயமான கோரிக்கையை மழுங்கடிக்கும் விதத்தில் கிடப்பில் போடுவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் ஒருகட்டமாகவே சபையைக் கோரும் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாது எந்த கோரிக்கைகளையும் முன்வைக்காத ஏனைய ஊர்களை இணைத்து சிக்கலாக்க முனைவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.


அங்கு நிறைவேற்றப்பட்ட ஏனைய தீர்மானங்கள் வருமாறு;

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விடயமாக செவ்வாய்க்கிழமை (24) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பில் கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பது எனவும் அதற்காக பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் குழுவொன்றை அமைப்பது எனவும் எடுக்கப்பட்ட தீர்மானமானது சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கையை மழுங்கடித்துதடுப்பதற்கான செயற்பாடாக நாம் கருதுவதுடன் அதனை முற்றாக நிராகரிக்கின்றோம்.

பிரதமர்  தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கும்சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவதற்குமிடையில் எந்தவிதத் தொடர்புமில்லை என்பதை உறுதியாக அறிவிக்கின்றோம்.

இத்தீர்மானமானது பிரதமர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகும்.

இவை தொடர்பாக மொத்தமாக 40 கூட்டங்கள் பல்வேறு தரப்புடனும் நடாத்தப்பட்டு முடிவடைந்திருக்கின்ற நிலையில் மீண்டுமொரு குழு நியமனம் என்பது இவ்வூர் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற நினைக்கும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டாகுமென கருதுகின்றோம்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை வழங்குவதில் பிரத்தியோகமான எல்லைப்பிரச்சினைகளோஇனக்கலப்போ இல்லாமையால் ஏற்கனவே வாக்குறுதியளித்தற்கிணங்க அதனை உடனடியாகப் பிரகடனம் செய்யுமாறு வேண்டுகின்றோம். அதுவரை எமது போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.

அவ்வாறு பிரகடனம் செய்யப்படா விட்டால் அரசியல் ரீதியாக எந்தக் கட்சியோஅரசியல்வாதிகளோ தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எவ்வித ஒத்துழைப்புகளும் வழங்கப்படாது என்பதுடன்அவர்களும் அவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்ந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

இதற்காக பொது மக்கள் அனைவரும் தமது அரசியல்கொள்கை வேறுபாடுகளை மறந்து எதிர்காலத்தில் எங்களால் மேற்கொள்ளப்பட இருக்கின்ற தீர்மானக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

இக்கோரிக்கையை தொடர்ந்து இழுத்தடிப்பதானது இரண்டு ஊர்களுக்குமிடையில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துமெனஅரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

இத்தீர்மானங்கள் அனைத்தும் நிகழ்வில் பங்கேற்றோரால் அல்லாஹ் அக்பர் எனும் கோஷத்துடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.   

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச