சிறுமியை அரசமரத்தின் கீழ் துஷ்பிரயோக முயற்சி

மெட்றோ)

சிறுமியை அரசமரத்தின் கீழ் அழைத்துச்சென்று துஷ்பிரயோக முயற்சி:பிணையில் விடுவிக்கப்பட்ட விகாராதிபதி விகாரைக்கு சென்றபோது மக்கள் ஆர்ப்பாட்டத்தினால் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார்

கம்பளை குறுந்து வத்தை பிரதேசத்தில் சமய வகுப்புக்குச் சென்ற சிறு­மியை பாலியல் வல்லு­றவுக்கு உட்படுத்த முயற்சித்த விகாராதிபதிக்கு எதிராக நேற்று குறுந்து வத்த நகரில் பிரதேச வாசிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் கம்பளை குறுந்துவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொழுவல விகாரையின் விஹாராதிபதி சமய வகுப்புக்குச் சென்ற சிறுமி ஒருவரை அங்கு ஒதுக்குப்புறமாக அமைந்­திருந்த அரச மரத்துக்குப் பின்புறமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சி செய்த சம்பவத்தையடுத்து குறுந்துவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட தையடுத்து குறித்த பிக்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் ஊர்மக்கள் இணைந்து குறித்த விகாரையை பூட்டு போட்டு பூட்டியிருந்த நிலையில் பிணையில் விடுதலையாகி வெளியில் வந்த குறித்த பிக்கு மீண்டும் விகாரைக்கு வந்து பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்துக் கொண்டு விகாரைக்குள் சென்றுள்ளார்.

இதன்போது ஒன்றுகூடிய மக்கள் உடனடியாக பிக்கு வெளியேற வேண்டுமெனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து குறுந்துவத்தை பொலிஸார் ஸ்தலத்துக்குச் சென்று குறித்த பிக்குவை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றதையடுத்து ஊர்மக்கள் களைந்துசென்றனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்