பொதுபல சேனாக்கு எதிராக மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டுமென ஞானசாரர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


AAM Anzir-
பொதுபல சேனாக்கும் முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான 3 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று  புதன்கிமை, 18 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றுள்ளது.
உலமா சபை பிரதிநிதிகள், முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் மற்றும் பாயிஸ் முஸ்தபா உள்ளிட்டோர் பங்கேற்ற இப்பேச்சுவார்த்தையில் முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன.
இஸ்லாத்தை மோசமாகவும், முஸ்லிம்களை கேவலமாகவும் விமர்சித்துவந்த ஞானசாரர் அந்நிலையிலிருந்து தற்போது பின்வாங்கியுள்ளதை அவரது பேச்சுக்கள் மற்றும் செயற்பாட்டின் மூலம் உணரக்கிடைத்ததாக இச்சந்திப்பில் பங்கேற்றவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும் தமது தரப்பிலிருந்து, சமூக ஊடகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் முஸ்லிம்களும் பொதுபல சேனாக்கு எதிராக மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டுமென ஞானசாரர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம்களின் பக்கமுள்ள  நியாயத்தை புரிந்துகொள்வதற்காக றிசாத் பதியிதீனுடனும் அதுதொடர்பிலான துறைசார் நிபணர்களுடனும் பேச்சநடத்த தாம் தயாரெனவும் அதற்கான ஏற்பாட்டை செய்துதரும்படியும் பொதுபல சேனா இதன்போது முஸ்லிம் தரப்பிடம் கோரியுள்ளது.
அத்துடன் தொடர்ந்து இருதரப்பும் பேசுவதெனவும் சந்தேகங்ளை களையும் நோக்குடள் பரஸ்பரம் இருதரப்பும் வேற்றுமையிலும் ஒற்றுமைப்பட்டு செயற்படுவதெனம் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்