சாய்ந்தமருது உள்ளூராட்சிசபை கோரிக்கைசாய்ந்தமருது உள்ளூராட்சிசபை கோரிக்கையானது யாருக்கும் அநீதி இளைப்பதற்காக கோரப்பட்ட ஒன்றல்ல. -பள்ளிவாசல் தலைவர்-
-எம்.வை.அமீர்-

யாருக்கும் அநீதி இளைப்பதற்காகவோ எவருடையதும் உரிமைகளையும்  தட்டிப்பறிக்கும் நோக்கிலோ  சாய்ந்தமருது மக்கள் உள்ளுராட்சிசபையைக் கோரவில்லை என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனிபா தெரிவித்தார்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் உள்ளுராட்சிசபை கோரிக்கையை வலியுறுத்தி, 30,31மற்றும் 01  திகதி வரை கடைகளை அடைத்து நோன்பு நோற்பதற்கு திட்டமிட்டுள்ளதை மக்களுக்கு அறிவிக்கும் “மக்கள் எழுச்சி பொதுக்கூட்டம்”, 2017-10-29 ஆம் திகதி ஜும்ஆ பள்ளிவாசல் முற்றலில் பிரமாண்டமான மக்கள் வெள்ளத்தில் இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திரண்டுள்ள மக்கள் வெள்ளம் சாய்ந்தமருதில் வரலாறு ஒன்றைப் படைக்கின்றனர். இந்தமக்கள் கூட்டம் அவர்களை, அவர்களே ஆழ வேண்டும் என்ற அடிப்படையில், அவர்களுக்கு என தனியானதொரு உள்ளுராட்சிசபையைக் கோரியே இங்கு திரண்டுள்ளனர். ஜனநாயகமான இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காய், சாய்ந்தமருது பள்ளிவாசல் 40 க்கு மேற்பட்ட உயர்மட்ட சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளது. இந்த சந்திப்புக்களில் பல்வேறு தரப்பினராலும் உத்தரவாதங்கள் தரப்பட்டபோதிலும் அவைகள் எதுவும் நிறைவேறுவதாக இல்லை. காலத்தை இழுத்தடிக்கும் நிகழ்வுகளே இடம்பெறுவதாகவும், தொடர்ந்தும் ஏமாறுவற்கு தாங்கள் தயாரில்லையென்றும் தங்களுக்கு நியாயம்கோரி, சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் நோன்பு நோற்று இறைவனிடம் பிராத்திக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையானது இன்று நேற்று உருவான கோரிக்கையல்ல. இது பலவருடங்களாக முன்னெடுக்கப்படும் கோரிக்கையாகும். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பலரிடமும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு அவர்களால் தருவதாக முன்வைக்கப்பட்ட ஒன்றாகும் அதேபோன்று இலங்கையில் உள்ள பிரதேச செயலகங்களில் உள்ளுராட்சிசபை இல்லாத பிரதேச செயலகத்தைக் கொண்ட பிரதேச செயலகம் என்றால், அது சாய்ந்தமருது பிரதேச செயலகம் தான் என்றும் சிறிய சிறிய ஊர்களுக்கும் பிரதேச சபைகள் இருக்கின்றபோதிலும் இந்த பெரிய ஊருக்கு உள்ளுராட்சிசபை இல்லாதது கவலையானதும் அநீதியானதுமான விடயமாகும் என்றும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பச்சை மஞ்சள், பச்சை, நீலக் கொடிகளை அரசியல்வாதிகளுக்காக கட்டிய இளைஞர்களே இப்போது கறுப்புக்கொடிகளைக் கட்டியுள்ளதாகவும் இளைஞர்களது பலத்தை அரசியல்வாதிகளுக்கு தான், கூறவேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மக்களின் உள்ளக்குமுறல்களை அரசாங்கமும் அரசியல்வாதிகளும் உதாசீனம் செய்துள்ளதாகவும், அவர்களது கோரிக்கைக்கு விரைந்து நிவாரணமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முன்னாள் கல்வி அதிகாரி பீர் முகம்மட், வைத்திய கலாநிதியும் சமூக சிந்தனையாளருமான நாகூர் ஆரீப், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.முகம்மட் சதாத், சாய்ந்தமருது மாளிகைக்காடு உலமா சபையின் தலைவர் அஷ்செய்க எம்.ஐ.எம்.சலீம், லங்கா அஷோக் லேலன்ட் நிறுவனத்தின் நிதி மற்றும் செயற்பாட்டுத் தலைவர் ஏ.ஆர்.முகம்மட் அஸீம் உள்ளிட்ட அதிதிகள் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை தொடர்பில் உள்ள நியாயப்பாடுகளையும் இந்த ஊருக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் இவற்றுக்காக கருத்து முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்கூறினார்.
சாய்ந்தமருதின் வரலாற்றில் முதன்முறையாக திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் உலமாக்கள்,மரைக்காயர்சபை உறுப்பினர்கள்புத்திஜீவிகள்சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்வர்த்தகர்கள்அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊர் நலன்விரும்பிகள் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்துகொண்டு பள்ளிவாசளால் முன்னெடுக்கப்படும் குறித்த கோரிக்கைக்கு ஆக்ரோஷமான தங்களது ஆதரவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
  

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்