ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
(எஸ்.அஷ்ரப்கான்)
அம்பாரை மாவட்ட பணிப்பாளர் கே.எல்.சுபைரின் முயற்சியினால்அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. களின் தலைவர், செயலாளர்களுக்கான விசேட ஒன்று கூடல் நிகழ்வு பணிப்பாளர் கே.எல்.சுபைரின் தலைமையில் கல்முனை அல்தாப் ஹோட்டலில் (ஏ.எப்.சி) நடைபெறவுள்ளது.
சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. கிளையின் வழிநடாத்தலில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பேரவையின் தேசியத் தலைவர் தேசபந்து எம்.என்.எம். நபீல் அவர்களும் கௌரவ அதிதிகளாக பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் ஸஹீட் எம். றிஸ்மி, பேரவையின் தேசிய பொருளாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம். நளீம் அகியோரும், விசேட அதிதிகளாக பேரவையின் போதைப்பொருள் தடுப்பு திட்ட தவிசாளர் எஸ்.தஸ்தகீர், பேரவையின் உதவிச் செயலாளர் எம்.ஐ. உதுமாலெப்பை ஆகியோரும் கிளை அங்கத்தவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வின்போது அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை ஊடாக மக்களுக்கு செய்யப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் மற்றும் கிளை வை.எம்.எம்.ஏ களின் செயற்திட்டங்கள், சவால்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a comment