ரோஹிங்யா விவகாரம் குறித்து சவூதியில் உயர் மட்டப் பேச்சுஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


சவூதி அரேபியாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அங்கு சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளுக்கான நிவாரணப் பொருட்களை விநியோகித்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் சவூதியில் உயர் மட்டப்பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். 
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை ஜித்தாவை சென்றடைந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை, சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும், இளவரசருமான பஹத் பின் அப்துல் அஸீஸின் செயலாளர் உள்ளிட்ட உயர் குழுவினரால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் விஜயத்தின் போது சவூதி அரேபியாவின் அரச உயர் அதிகாரிகளையும், சர்வதேச இஸ்லாமிய நிறுவனத்தினுடைய செயலாளர் நாயகம், சவூதி இளவரசர் பஹத் பின் அப்துல் அஸீஸ் உள்ளிட்ட பல்வேறு அரச தலைவர்களை சந்திக்கவுள்ளார். இதன்போது, சமகாலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள்  தொடர்பாகவும், பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்