Skip to main content

ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு

  ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு   புதிய பதவி நிலைகளை   நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க  உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர்  உதவித் தலைவராக  ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ்  கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க   புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க  பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க  வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே  தவிசாளராக  அங்கீகரிக்கப்பட்டுள்ளார்,  ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே  ஐ.தே.க  தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.

மாகாண சபைகளுக்கான தொகுதி எல்லை நிர்ணயம்

மாகாண சபைகளுக்கான தொகுதி எல்லை நிர்ணயம்
********************************************
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவுக்கு தமது சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக முஸ்லிம் சிவில் சமூகம் புத்தி ஜீவிகளையும், துறை சார்ந்தோரையும் இணைத்துக்கொண்டு தீவிரமான கலந்துரையாடல்களை நிழ்த்துவதைக் காணமுடிகிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டாரங்களின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில் 1000 வட்டாரங்கள் இரட்டை மற்றும் மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட வட்டாரங்களாக இருந்தன. இந்த எல்லை நிர்ணயம் முஸ்லிம்களின் உள்ளூராட்சி அரசியல் அதிகாரத்துக்கு மிகவும் சாதகமாக அமைந்திருந்தது. இந்த 1000 வட்டாரங்களில் பெரும்பாலானவை முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வகையில் எல்லையிடப்பட்டிருந்தன. மேலும் அம்முறைமை தோல்வியடையும் கட்சிகளும் பிரதிநிதித்துவத்தைப் பெறும் வகையிலும் அமைந்திருந்தது. இந்த ஏற்பாட்டினால், வடகிழக்குக்கு வெளியில் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் வளரவும் நிலைக்கவும் வழிவகை இருந்தது.

தற்போது நல்லாட்சி அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டாரத் தேர்தல் முறையில் 167 இரட்டை அங்கத்தவர் வட்டாரங்களும் 4 மூன்று அங்கத்தவர் வட்டாரங்களும் மாத்திரமே அடங்கியுள்ளன. 60 : 40 என்ற தேர்தல் முறைமையில், தொகுதி மற்றும் வீதாசார அடிப்படையிலான தெரிவுகள் இருப்பதால் சிறுபான்மையினருக்கு நீதி செய்யப்பட்டுள்ளதாகப் பொய்யுரைக்கப்படுகிறது.

இம்முறையினால் அதிகம் நன்மை பெறப் போவது பெருந்தேசியக் கட்சிகளே ஆகும். ஏனெனில் தோல்வியடைந்த கட்சிகளில் அதிக வாக்குப் பெற்ற கட்சிக்குப் பிரதிதிதித்துவம் ( Best looser system) கிடைக்கும் முறை நீக்கப்பட்டு, அதிக வாக்குகள் பெறும்  கட்சிகள் தாம் பெற்ற வாக்குகளுக்கு அமைவாக 40 வீத வீதாசாரப் பிரதிநிதித்துவத்தைப் பங்கிட்டுக் கொள்ளும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்முறையினால் வடகிழக்குக்கு வெளியில் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் படுகொலை செய்யப்பட்டு, பெருந்தேசியக் கட்சிகளே வீக்கம் அடையும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

முன்னர் கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறையும், எல்லை நிர்ணயமும் கடந்த அரசுக்கும்,சுதந்திரக் கட்சிக்கும் சாதகமாக அமைந்திருந்தது என்று கூறி முஸ்லிம் மக்களது கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, புதிய அரசு புதிய முறையைக் கொண்டுவந்து சாதித்துக் கொண்டது. முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் வழமைபோல் வாழாதிருந்தனர்.சிறுபான்மை மக்களும் மஹிந்த அரசில் குற்றம் சுமத்தினால் அசமந்தமாக இருக்கப் பழகிக் கொண்டனர்.

மேற்சொன்ன அனுபவத்தின் அடிப்படையில்தான் முஸ்லிம்கள் மாகாணசபைகளுக்கான புதிய எல்லை நிர்ணயத்தையும் நோக்கவேண்டியுள்ளது.ஏற்கனவே மாகாண எல்லை நிர்ணயத்துக்குத் தரப்பட்டுள்ள வழிகாட்டலைப் பார்த்தால் மாகாண சபைகளில் ஏற்கனவே இருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் மிக மோசமாகக் குறைவடையும் என்பதில் சந்தேகமில்லை.

கிழக்கில் முஸ்லிம்கள் வசம் தமது மக்கள் தொகைக்கு ஏற்ப பரந்த நிலப்பரப்பு கிடையாது. வழிகாட்டலில் தரப்பட்டுள்ள ஒரு தொகுதிக்கு இருக்கவேண்டிய மக்கள் தொகைப்படி பார்த்தால் தற்போதிருக்கும் வீதாசாரத் தேர்தல் முறை மூலம் கிடைக்கும் முஸ்லிம் உறுப்பினர் தொகை புதிய தேர்தல் முறை மூலம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒரு தொகுதிக்குரிய மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் நிலப்பரப்பின் அடிப்படையில் தமக்கு கிடைக்க வேண்டிய உறுப்பினர் தொகையை நிர்ணயித்துக் கொள்ளும் வாய்ப்பு சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமே இருக்கிறது. இந்த வாய்ப்பு கிழக்கு முஸ்லிம்களுக்குக் கிடையாது.

மாகாண சபைத் திருத்தச் சட்டத்தை தோற்கடிக்க வாய்ப்பிருந்தும் செய்யத் தவறிய  தலைமைகள் முஸ்லிம் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கு தாம் தொகுதி முறையை 50℅ மாகவும் வீதாசார முறையை 50 ℅ என்றும் திருத்தியமை முஸ்லிம்களுக்குச் சாதகமானது என்று சொல்வதில் எவ்வித உண்மையுமில்லை.கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டால் மாத்திரமே இத்திருத்தத்தால் ஓரளவு நன்மை கிடைக்கும்.ஆனால் இது நடக்கும் என்று தற்போதைக்கு நம்ப முடியவில்லை.

பெரிய கட்சிகள் உள்ளூராட்சி சபைகளின் வட்டார எல்லை நிர்ணயத்தில் நடந்து கொண்டதைப்  போன்றே மாகாணசபைத் தொகுதி எல்லை நிர்ணயத்திலும் முஸ்லிம்களை ஏமாற்றத் தயாராகி வருகின்றன.

எதிர்வரும் 2 ஆம் திகதி வழங்கப்பட்ட கால எல்லை முடிவடையும் முன்னர் சிபாரிசுகளைச் செய்வதற்கு முஸ்லிம் புத்தி ஜீவிகள் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபடுகின்றனர். எந்த ஆலோசனையோ, சிபாரிசோ தரப்பட்ட வழிகாட்டலுக்கு அமைவாகத்தானே இருக்கலாம். இவ்வழிகாட்டலை மீறி என்னதான் சிபாரிசைச் செய்தாலும் அவை கவைக்கு உதவாதவையாக தூக்கி வீசப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டார எல்லை நிர்ணயம் முடிந்த கையோடு வட கிழக்குக்கு வெளியில் முஸ்லிம்களுக்கு  நடந்தது போன்று -  மாகாண சபைகளுக்கான தொகுதி நிர்ணயம் முடிவடைந்ததும் கிழக்கிலும் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலுக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிடும். கிழக்கு மாகாணத்தில் இனிவரும் எந்தத் தேர்தலிலிலும் தனித்துவக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராவது மிக்க கடினமானது. முஸ்லிம்கள் சிங்களத் தேசியக் கட்சிகளில் அல்லது தமிழ்த் தேசியக் கட்சியில் தஞ்சமடையும் நிலை தோன்றலாம்.

Basheer  segu  davood

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச