ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
கட்டார்
நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளும் அமைச்சர் ரிஷாட்
உயர்மட்ட
வர்த்தகர்களின் கூட்டத்திலும் பங்கேற்பு
ஊடகப்பிரிவு
இரண்டு நாள்
விஜயம் ஒன்றை மேற்கொண்டு, நாளை (24.10.2017) கட்டார் நாட்டுக்கு பயணமாகும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின்
தூதுக்குழுவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும்
இணைந்துகொள்கின்றார்.
இரண்டு
நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம், முதலீடு, உல்லாசத்துறை மற்றும் வெளிநாட்டு
வேலைவாய்ப்புக்களை மேம்படுத்தல் மற்றும் இன்னோரன்ன விடயங்களை நோக்காகக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த
தூதுக்குழுவின விஜயத்தின் போது, வர்த்தக மேம்பாடுகள்
தொடர்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வர்த்தக
திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை -
கட்டார் நாடுகளினது வர்த்தகம் மற்றும் முதலீட்டு சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள
இரண்டு நாடுகளைச் சார்ந்த உயர்மட்ட வர்த்தகர்கள் பங்கேற்கும் முக்கிய
கூட்டமொன்றிலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு விசேட உரை ஒன்றை
நிகழ்த்தவுள்ளார். டோஹாவிலுள்ள ஷெராட்டன் கிரான்ட் சம்மேளன மண்டபத்தில் இடம்பெறும்
இந்தக்கூட்டத்தில் இலங்கையிலிருந்து முக்கிய வர்த்தகர்கள் பலர் பங்கேற்கின்றனர். கட்டார் அரசின் முக்கிய
தலைவர் ஒருவரும் இந்தக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்.
இந்தக்
கூட்டத்தை அடுத்து வர்த்தகர்களின் செயலமர்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
வர்த்தக சம்மேளன அதிகாரி மேலும்
தெரிவித்தார்.
Comments
Post a comment