போலி ஆவணங்களைத் தயாரித்து வெளிநாடு அனுப்ப முற்பட்ட ஒருவர் கைது( மினுவாங்கொடை நிருபர் )

   போலி ஆவணங்களைத் தயாரித்து, இளம் பெண் ஒருவரை வெளிநாடு அனுப்ப  முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை,  வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்து, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதேவேளை, இளம் வயது பிள்ளைகள் உள்ள நிலையில் இப்பெண் வெளிநாடு செல்ல முற்பட்டார் என்ற குற்றத்தின்பேரில், இவர்மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
   இந்த நிலையில், குறித்த சந்தேக நபரை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்ற நீதிவான் சீலனீ சத்துரந்தி பெரேரா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்