ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
எம்.வை.அமீர் -
சாய்ந்தமருது கமு/கமு மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வு, மற்றும் மாணவர்கள் கௌரவிப்பு விழாவும் கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஐ. மதனி தலைமையில்16.10.2017 திகதியன்று கல்லூரியின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், யஹியாகான் பவுண்டேஷன் அமைப்பினுடைய தலைவருமாகிய ஏ.சி.யஹியாகான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இங்கு பிரதம அதிதி உரையாற்றும் போது அதிபர் அவர்களின் வேண்டுகோளினை அடுத்து போட்டோ பிரதி பண்ணும் இயந்திரம் (Photo Copier Machine) ஒன்றினை வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.
மேலும், கௌரவ அதிதிகளாக வலய கல்வி உதவி பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் மற்றும் கோட்டை கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ.ரஹ்மான் விஷேட அதிதிகளாக உதவி அதிபர் ஏ.எல்.எம். தன்சீல்,பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.எல். ஹிதாயத்துல்லாஹ்,தென் கிழக்கு பல்கலைக் கழக உத்தியோகத்தர் எஸ்.எம். கலீல் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வின் போது ஆசிரியர்களுக்கு பரிசுப்பொருட்களும், மாணவர்களுக்கு பணப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் எப்.எம்.பர்ஹான் என்பவருக்கு அவரின் கல்வி நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் வகையில் கற்றல் உபகரணங்கள் மற்றும் பணப்பரிசும் வழங்கி பாராட்டப்பட்டார்.
மேலும்,பிரதம அதிதிக்கு கல்லூரின் அதிபரால் நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
Comments
Post a comment