ஜனாதிபதியால், கல்முனைத் தொகுதிக்கு இணைத் தலைவராக சட்டத்தரணி றஸ்ஸாக் அதிரடியாய் நியமனம்!!!
-எம்.வை.அமீர் -
ஐக்கியதேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.எஸ்.அப்துல் றஸ்ஸாக், கல்முனைத் தொகுதியில் உள்ள சாய்ந்தமருது, கல்முனை முஸ்லிம் மற்றும் கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளிட்ட பிரதேசங்களுக்கான பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சேனநாயக்காவால் அதிரடியாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இப்பிரதேசங்களுக்கான பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் செயற்பட்டு வந்திருதார். அவருடன் இணைந்து சமனாக செயற்படும் வகையிலேயே குறித்த நியமனம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய அபிவிருத்தித் திட்டத்துக்கு அமைவாக குறித்த பிரதேசங்களுக்கான அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களை நடைமுறைப்படுத்துதல்,கண்காணித்தல் போன்ற விடயங்களை இணைத்தலைவர்கள் மேற்கொள்வர்.
Post a Comment