யஹ்யாகான் பௌண்டேசனின் சிறுவர் தின நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹரீஸ் பங்கேற்ப்பு!!


யஹ்யாகான் பௌண்டேசனின் சிறுவர் தின நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹரீஸ் பங்கேற்ப்பு!!
-எம்.வை.அமீர்-
ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படும் சிறுவர் தின நிகழ்வுகள் யஹ்யாகான் பௌண்டேசனின் ஏற்பாட்டில் பிரமாண்டமான முறையில் பௌண்டேசனில் தலைமை காரியாலயத்தில் 2017-10-01 அன்று அவ்அமைப்பின் ஆயுட்காலத் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூக சிந்தனையாளருமான ஏ.சி.யஹ்யாகான் தலைமையில் இடம்பெற்றது.
பெருமளவான சிறுவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான அல் ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியதுடன் யஹ்யாகானுடன் இணைந்து சிறுவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் பங்குகொண்ட சிறுவர்களுக்கிடையில் சிட்டு மூலம் வெற்றிபெற்ற ஒரு சிறுவனுக்கு பெறுமதியான பைசிக்கிள் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்