மினுவாங்கொடையில் "லங்கா சதொச" கிளை ஒன்று நிறுவப்படுமா ?( மினுவாங்கொடை நிருபர் )

   மினுவாங்கொடை நகரில் "லங்கா சதொச" நிறுவனத்தின் கிளையொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு, இப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 
   நீர்கொழும்பு, கட்டுநாயக்க, திவுலப்பிட்டிய, நிட்டம்புவ, கம்பஹா, ஜா-எல ஆகிய நகரங்கள், மினுவாங்கொடை நகரை அண்டிய நகரங்களாக இருப்பதால், குறித்த நகரங்களுக்கும் மினுவாங்கொடை நகரத்திற்கும் இடைப்பட்ட மக்கள், இந்நகரில் "லங்கா சதொச" ஒன்றை நிறுவும் பட்சத்தில், உச்ச பயன்களைப் பெற்றுக்கொள்வர்.
   நுகர்வோர் அத்தியவசிய உணவுப் பொருட்களை, பெருமளவில் தனியார் வர்த்தக நிறுவனங்களிலேயே கொள்வனவு செய்கின்றனர். இதற்கு பெருமளவு பணமும் தேவைப்படுகின்றது. இதனால் நடுத்தர ஏழை வர்க்கத்தினர், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 
   மினுவாங்கொடை பிரதேச எல்லையில், மூவின சமூகங்கள் செறிந்து வாழ்வதாலும், நாடளாவிய ரீதியில் 370 க்கும் மேற்பட்ட "சதொச" கிளைகளில் குறைந்த விலைகளில்  அத்தியவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாலும், மக்கள் நலன் கருதி மினுவாங்கொடை நகரிலும் "லங்கா சதொச" கிளையொன்றை நிறுவவேண்டிய கட்டாயத் தேவை உருவாகியுள்ளது. எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்டோர், உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும், மினுவாங்கொடை பிரதேச வாழ் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்