இரண்டாவது சர்வதேச புத்தகக் கண்காட்சி


Senthilvelavar Thevathasan

பாண்டிச்சேரியில்  டிசம்பர் 22 -31 வரை

இலங்கை எழுத்தாளர்கள், புத்தகக்கடை உரிமையாளர்களுக்கும் சந்தர்ப்பம்இந்தியா பாண்டிச்சேரி  எழுத்தாளர்கள் புத்தகச் சங்கத்தின் சார்பில் பாண்டிச்சேரி வேல். சொக்கநாதன் திருமண மண்டபத்தில் 2017 டிசம்பர் 22 முதல் 31 வரை 10 நாட்கள் இரண்டாவது சர்வதேச புத்தகக் கண்காட்சி தொடர்ந்து பத்துத் தினங்களுக்கு நடைபெறவுள்ளது.


இக்கண்காட்சியில் பாண்டிச்சேரி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி முதலான இந்தியப் பகுதிகளிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிசியஸ் முதலான அயல்நாடுகளில் இருந்தும் சுமார் 100 புத்தக வெளியீட்டு மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன என அதன் அமைப்பின் தலைவர் பேராசிரியர் பாஞ். இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.


ஒரு லட்சத்திறக்கு மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. இக்கண்காட்சியில் பாண்டிச்சேரி, மற்றும் அயல்நாட்டு எழுத்தாளர்களின் 10 நூல்கள் வெளியிடப்படவுள்ளமை விசேட நிகழ்வாகும்.

கண்காட்சியி;ல் பாண்டிச்சேரி, எழுத்தாளர்களின் நூல்களுக்கு தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்படுகிறது. கண்காட்சியில் இடம் பெறும் நூல்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சியில் மிகுதியான புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு 'புத்தக விரும்பி, புத்தக ராஜா, புத்தக ராணி, புத்தக மகாராஜா, புத்தக மகாராணி' ஆகிய விருதுகளும், எழுத்தாளர்களுக்கும், புத்தக நிறுவனங்களுக்கும ; 'புத்தக சேவா ரத்னா' விருதும் வழங்கப்பட உள்ளன எனவும் பேராசிரியர் பாஞ். இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.இலங்கையிலுள்ள புத்தக கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள் இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளவும், இந்த புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ளவும்  விழாவின் இலங்கைப் பிரதிநிதியான பத்திரிகையாளர் தே. செந்தில்வேலவர் அவர்களுடன் 0777304078 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள முடியும். இலங்கையிலிருந்து இந்த விழாவில் கலந்து கொள்ளவென ஏற்கனவே தங்களைப் பதிவு செய்தவர்கள் நேரடியாக மேலும் விபரம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய பாண்டிச்சேரி, எழுத்தாளர்கள் புத்தக சங்க அலவலக தொலைபேசி 00949486948060 எண்ணுடனும்; தொடர்பு கொள்ள முடியும்.கண்காட்சி குழுவின் தலைமைக் காப்பாளராக நீதியரசர் தாவீது அன்னுசாமியும், காப்பாளர்களாக அரசு கொறடா திரு. ஆர்.கே.ஆர். அனந்தராமன், திரு. வேல். சொ. இசைக்கலைவன், முனைவர் வி. முத்து

ஆகியோர் உள்ளனர். பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்களாக முனைவர் தி.

இராமநாயகம் (மலேசியா), திரு. எம். இலியாஸ் (சிங்கப்பூர்). திரு. தே.

செந்தில்வேலவர் (இலங்கை), திரு. தேவரக்கா (மொரிசியஸ்) ஆகியோர் உள்ளனர்.  தலைவராக முனைவர் பாஞ். இராமலிங்கம், துணைத்தலைவர்களாக தியாகி அப்துல்  மஜீத், முனைவர் சோ. சீனுவாசன், செயலராக திரு. கோ. முருகன், இணைச்
செயலர்களாக முனைவர் வீ. செல்வப்பெருமாள், திரு. ந. கோதண்டபாணி ஆகியோர் உள்னர். தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக திரு. ஸ்டிபன் இன்பநாதன், திருமதி. ரெகனா பேகம் ஆகியோர் உள்ளனர்.


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்