கட்டுநாயக்கவில் சுற்றித்திரிந்த 60 பேர் கைது

   கட்டுநாயக்கவில் சுற்றித்திரிந்த 60 பேர் கைது 
நீதிமன்றில் 90 ஆயிரம் ரூபா அபராதம் 

( மினுவாங்கொடை நிருபர் )

   கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 60 பேரை, கட்டுநாயக்க குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்து, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர். 
   இவர்கள் ஒவ்வொருவருக்கும்  தலா 1, 500 ரூபா வீதம் 90 ஆயிரம் ரூபாவை அபராதத் தொகையாகச் செலுத்துமாறு, மினுவாங்கொடை பதில் மாஜிஸ்திரேட் நீதவான் பிரியந்தி லியன ஆரச்சி, நேற்று முன் தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
   நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் கட்டுநாயக்க  வந்து சுற்றித்திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் ஆண்கள் என, நீதி மன்ற பதிவேட்டில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.       கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் கான்ஸ்டபில் திசாநாயக்க (38226) இம்முறைப்பாட்டைச் செய்திருந்தார்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்