Skip to main content

Posts

Showing posts from October, 2017

கிரான் விவகாரம்; நாடாளுமன்றத்தில்

கிரான் விவகாரம்; நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல் அசாதாரன நிலைமையைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை  ++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++ ++++++++ மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கலந்துரையாடலொன்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.  இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதியமைச்சர் அமீர் அலி, ஸ்ரீநேசன், அலி சாஹிர் மௌலானா மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர்.  இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி, கிரான் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலை தொடர்ந்து செல்வதால் உடனடிய

கட்டார் - இலங்கைக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

ஊடகப்பிரிவு கொழும்பில் நேற்றுக் காலை ( 30) ஆரம்பமான கட்டார் - இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இன்றைய ( 31) அமர்வில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான வரத்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வரத்தக அமைச்சர் ஷேக் அஹமட் பின் ; ஜாஷிம் பின் ; முஹம்மட் அல் தானிக்குமிடையில் இந்த முக்கியத்துவம்வாய்ந்த ஒப்பநதம் ; கைசாத்திடப்பட்டது. உல்லாசப் பயணத்துறை , சமையல் எரிவாயு , விமானப்போக்குவரத்து உள்ளடங்கிய இன்னோரன்ன துறைகளில் பரஸ்பர நாடுகளின் மேம்பாடு  தொடர்பிலேயே ஒப்பந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இன்றைய அமர்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீனும் கட்டார் நாட்டின் வர்த்தக அமைச்சரும் சிறப்புரையாற்றினர். இரண்டு நாடுகளினதும் நீண்டகால உறவுகள் , பொருளாதார மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறித்து இருவரும் தமது உரையில் சிலாகித்துப் பேசினர். கைத்தொழில் மற்றும் வரத்தக அமைச்சின் கீழான வர்த்தக திணைக்களம் , சர்வதேச மூலோபாய அமைச்சின் கீழான ஏற்றுமதி அபிவி

நான்காக பிரிப்பதில் கல்முனை வாழ் தமிழ் ழ்மக்களுக்கு எவ்விதத்திலும் உடன்பாடில்லை

கல்முனை மாநகரசபை பிரதேசத்தை நான்காக பிரிப்பதில் கல்முனை வாழ் தமிழ் ழ்மக்களுக்கு எவ்விதத்திலும் உடன்பாடில்லை என்று ரெலோ கட்சியின் உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது திட்டமிட்டு கல்முனை பிரதேச தமிழ்க்கிராமங்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் சதி முயற்சியாகும். இதற்கு ஒருபோதும் நாம் அனுமதிக்கப்பபோவதில்லை என்றும் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் அமைச்சர் மனோகணேசன் ஆகியோரை இன்று சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கல்முனையை நான்கு உள்ளுராட்சிசபைகளாகப் பிரிப்பது தொடர்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டபோது நாம் பகிரங்கமாகவே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம். அது எவ்விதத்திலும் எமக்கு உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளார். சாய்நதமருதுக்கு தனியான பிரதேசசபை வழங்கப்படுவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. அதற்கு எமது தார்மீக பரிபூரண ஆதரவை வழங்கத் தயாராகவுள்ளதாகவும்

சாய்ந்தமருது உள்ளூராட்சிசபை கோரிக்கை

சாய்ந்தமருது உள்ளூராட்சிசபை கோரிக்கையானது யாருக்கும் அநீதி இளைப்பதற்காக கோரப்பட்ட ஒன்றல்ல. -பள்ளிவாசல் தலைவர்- -எம்.வை.அமீர்- யாருக்கும் அநீதி இளைப்பதற்காகவோ எவருடையதும் உரிமைகளையும்  தட்டிப்பறிக்கும் நோக்கிலோ  சாய்ந்தமருது மக்கள் உள்ளுராட்சிசபையைக் கோரவில்லை என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனிபா தெரிவித்தார். சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் உள்ளுராட்சிசபை கோரிக்கையை வலியுறுத்தி,  30,31 மற்றும்  01    திகதி வரை கடைகளை அடைத்து நோன்பு நோற்பதற்கு திட்டமிட்டுள்ளதை மக்களுக்கு அறிவிக்கும் “மக்கள் எழுச்சி பொதுக்கூட்டம்”,  2017-10-29  ஆம் திகதி ஜும்ஆ பள்ளிவாசல் முற்றலில் பிரமாண்டமான மக்கள் வெள்ளத்தில் இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். திரண்டுள்ள மக்கள் வெள்ளம் சாய்ந்தமருதில் வரலாறு ஒன்றைப் படைக்கின்றனர். இந்தமக்கள் கூட்டம் அவர்களை, அவர்களே ஆழ வேண்டும் என்ற அடிப்படையில், அவர்களுக்கு என தனியானதொரு உள்ளுராட்சிசபையைக் கோரியே இங்கு திரண்டுள்ளனர். ஜனநாயகமான இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காய், சாய்ந்தம

கல்முனை மாநகரத்தினை ஏக காலத்தில் நான்கு உள்ளூராட்சிகளாக உடனடியாக பிரிக்க வேண்டும்

கல்முனை மாநகரத்தினை ஏக காலத்தில் நான்கு உள்ளூராட்சிகளாக உடனடியாக பிரிக்க வேண்டும். கல்முனை மக்கள் பிரகடணம். கல்முனை மாநகரத்தின் இருப்பு, நீண்ட கால உள்ளூராட்சி வரலாறு, பிரதேச ஒற்றுமை என்பவற்றிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஒரு பக்க நலனை மட்டும் கருத்திற்கொண்டு சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை யாவரும் அறிந்திருப்பீர்கள். நீண்ட நெடிய வரலாற்று பூர்வீகத்தினைக் கொண்ட கல்முனையின் இருப்பு, பாதுகாப்பு, அரசியல் மற்றும் நிர்வாகத்தினை பலவீனப்படுத்தும் முயற்சிகளிலிருந்து கல்முனையை பாதுகாக்கும் பொருட்டு 26-10-2017 வியாழக்கிழமை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளத்தின் அழைப்பில் கல்முனை பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடிய பெரும் சபை கீழ்வரும் தீர்மானங்களை ‘அல்லாஹு அக்பர்’ கூறி நிறைவேற்றியது. அல்ஹம்துலில்லாஹ்! தீர்மானங்கள்; 01. கல்முனை மாநகர சபைப் பிரதேசத்தை 1897ம் ஆண்டு மற்றும் 1936ம் ஆண்டுகளுக்குரிய வர்த்தமானி அறிவித்தல்களின் படி அமைந்த எல்லைகளுக்குரிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களாக ஏக காலத்தில் பிரித்து வழங்க வேண்டும். 02. தாளவட்டுவான் வீதி முதல் ஸாகிறா கல்லூரி வீத

சாய்ந்தமருதில் 3 நாள் தொடர் கடை அடைப்பும், ஹர்த்தால் அனுஷ்டிப்பும்

- யூ.கே. காலித்தீன் - சாய்ந்தமருதில் 3 நாள் தொடர் கடை அடைப்பும், ஹர்த்தால் அனுஷ்டிப்பும், நோன்பு நோற்றலும், பொதுக் கூட்டமும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~ சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கையான தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையானது, அனைத்துக் கட்சிகளின் தலைமைகளாளும் அங்கீகரிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட நிலையில், அதனை வெற்றிகொள்ளுமுகமாக அரசுக்கு அழுத்தத்தை பிரயோகிக்கும் வண்ணம்,  சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல், உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியமும் ஒன்றினைந்து நேற்றிரவு சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் அதன் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் தீர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டது * எதிர்வரும் திங்கட்கிழமை (30) முதல் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு கடையடைப்பு * வயது வந்த அனைவரும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்று, விஷேட துஆ பிராத்தனையில் ஈடுபடுவது * உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் பள்ளிவாசல் மேற்கொண்ட முன்னெடுப்புகள் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் பொதுக் கூட்டமும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை, சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் ம

சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த அணியை இணைத்துக் கொண்டு

உள்ளுராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த அணியை இணைத்துக் கொண்டு போட்டியிடவுள்ளோம்: அமைச்சர் அமரவீர! ********************************************** உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரியளவிலான வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு, ஒன்றிணைந்த எதிரணியையும் (மஹிந்த அணி) இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். வட்டகொடை மடக்கும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை மீன் குஞ்சுகள் இடும் வைபவத்தில் அமைச்சர் அதிதியாகக் கலந்து கொண்டார். இதன்போது அவரிடம், எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “புதிய அரசியல் யாப்பில் நாட்டை பிளவுப்படுத்தும் எந்தவொரு திட்டமும் இடம்பெறவில்லை. வடக்கு, கிழக்கை பிரிப்பதோ அல்லது பௌத்த சமயத்தை முன்நிறுத்துவதோ போன்ற எந்த நடவடிக்கையும் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கவில்லை. நாட்டில் உள்ள மக்கள் அணைவ

மாகாண சபைகளுக்கான தொகுதி எல்லை நிர்ணயம்

மாகாண சபைகளுக்கான தொகுதி எல்லை நிர்ணயம் ******************************************** மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவுக்கு தமது சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக முஸ்லிம் சிவில் சமூகம் புத்தி ஜீவிகளையும், துறை சார்ந்தோரையும் இணைத்துக்கொண்டு தீவிரமான கலந்துரையாடல்களை நிழ்த்துவதைக் காணமுடிகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டாரங்களின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில் 1000 வட்டாரங்கள் இரட்டை மற்றும் மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட வட்டாரங்களாக இருந்தன. இந்த எல்லை நிர்ணயம் முஸ்லிம்களின் உள்ளூராட்சி அரசியல் அதிகாரத்துக்கு மிகவும் சாதகமாக அமைந்திருந்தது. இந்த 1000 வட்டாரங்களில் பெரும்பாலானவை முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வகையில் எல்லையிடப்பட்டிருந்தன. மேலும் அம்முறைமை தோல்வியடையும் கட்சிகளும் பிரதிநிதித்துவத்தைப் பெறும் வகையிலும் அமைந்திருந்தது. இந்த ஏற்பாட்டினால், வடகிழக்குக்கு வெளியில் முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் வளரவும் நிலைக்கவும் வழிவகை இருந்தது. தற்போது நல்லாட்சி அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக

பொதுபல சேனாக்கு எதிராக மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டுமென ஞானசாரர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

AAM Anzir- பொதுபல சேனாக்கும் முஸ்லிம் தரப்புக்கும் இடையிலான 3 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று  புதன்கிமை, 18 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றுள்ளது. உலமா சபை பிரதிநிதிகள், முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் மற்றும் பாயிஸ் முஸ்தபா உள்ளிட்டோர் பங்கேற்ற இப்பேச்சுவார்த்தையில் முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன. இஸ்லாத்தை மோசமாகவும், முஸ்லிம்களை கேவலமாகவும் விமர்சித்துவந்த ஞானசாரர் அந்நிலையிலிருந்து தற்போது பின்வாங்கியுள்ளதை அவரது பேச்சுக்கள் மற்றும் செயற்பாட்டின் மூலம் உணரக்கிடைத்ததாக இச்சந்திப்பில் பங்கேற்றவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் தமது தரப்பிலிருந்து, சமூக ஊடகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் முஸ்லிம்களும் பொதுபல சேனாக்கு எதிராக மேற்கொண்டுவரும் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டுமென ஞானசாரர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம்களின் பக்கமுள்ள  நியாயத்தை புரிந்துகொள்வதற்காக றிசாத் பதியிதீனுடனும் அதுதொடர்பிலான துறைசார் நிபணர்களுடனும் பேச்சநடத்த தா

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை; ஒரு வார காலக்கெடு;

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை; ஒரு வார காலக்கெடு; இல்லையேல் ஹர்த்தால், கடையடைப்பு; கட்சிகளை புறக்கணித்து சுயேட்சை அணிக்கும் தயார்; பள்ளிவாசலில் பொது அமைப்புகள் கூடித் தீர்மானம்! (அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர், யூ.கே.காலீத்தீன்) சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவது தொடர்பில் தீர்க்கமான முடிவை அறிவிப்பதற்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் ஹர்த்தால் கடையடைப்பு நடவடிக்கையை முன்னெடுப்பது என சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற சிவில் சமூக பொது அமைப்புகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை ஸ்தாபிக்கப்படா விட்டால் அத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு இடமளிக்காமல் பொதுவான சுயேட்சைக் குழுவொன்றை களமிறக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஒரே கொள்கையின் கீழ் சாய்ந்தமருது மக்கள் என்ற ரீதியில் ஒற்றுமையுடனும் பள்ளிவாசல் தலைமைத்துவத்தின் கட்டுக்கோப்பை மீறாத வகைய

මෛතී්‍රපාල සිරිසේන මහතා සමග කටාර් රාජ්‍ය වෙත පෙමිණි අමාත්‍ය ෆයිසර් මුස්තෆා

අතිගරු ජනාධිපති මෛතී්‍රපාල සිරිසේන මහතා සමග නිල සංචාරයක් ර්‍සදහා කටාර් රාජ්‍ය වෙත පෙමිණි අමාත්‍ය ෆයිසර් මුස්තෆා මහතා උත්සවයකට සහභාගිවීමට පෙර මල් කිතිත්තක් පර්‍ලදවන අයුරු. ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களுடன் கடார் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களை நிகழ்கவொன்றுக்கு பங்குபற்றும் முன் மலர்ச்செண்டு அணிவித்து வரவேற்கும் காட்சி.

பொத்துவிலில் தொடரும் போராட்டம்.

-முர்ஷித் முஹம்மட்- பொத்துவில் பிரதேசத்தில் நிலவுகின்ற பெருமளவான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரியும் மெத்தனப்போக்கில் கண்மூடித்தனமாக இருக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்தும் பொத்துவிலில் தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. கடந்த சில நாட்களாக பாடசாலைகளுக்கு எந்த பிள்ளைகளையும் அனுப்பாது பெற்றோர்கள் தங்கள் எதிர்பலைகளை பதிவு செய்கிறார்கள். இதயொட்டி கடந்த  25.10.2017  அன்று மாபெரும் கண்டன பேரணியும் நடாத்தப்பட்டது. தொடர்ந்தும் நிரந்தர தீர்வு கிடைக்காவிடில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் பெற்றோர்கள் சூளுரைத்துள்ளனர். இப்போதைய பொத்துவில் கல்வி கள நிலவரம் படுமோசமாக இருக்கின்றது. பொத்துவிலில் மொத்தம்  21 பாடசாலைகள் இருக்கின்றன.2016 கல்வி நிருவாக சுற்றுநிரூபத்தின்  படி 460 ஆசிரியர்கள் தேவை. ஆனால் இருப்பதோ வெறும் 285 ஆசிரியர்கள். சுமார் 175 ஆசிரியர் பற்றாக்குறையோடு பொத்துவில் கோட்டம் தத்தளிக்கிறது. 175 ஆசிரியர்கள் இன்றி பொத்துவில் கோட்டம் இயங்குவதென்பது மிகுந்த வேதனையானது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொத்திவில் கல்வி நிலையை சீர்படுத்தி மாணவர்கள் தடை

கட்டாரில்அமைச்சர்றிஷாட்

கட்டாருடன்வலுவானபொருளாதாரவர் த்தகஉறவைமேம்படுத்தஇலங்கைநாட்டம். கட்டாரில்அமைச்சர்றிஷாட் ஊடகப்பிரிவு “ கட்டாருடன் வலுவான வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்தஇலங்கைநாட்டங்கொண்டுள்ளதாகவும்இரண்டுநாடுகளும்நீண்டகாலபொருளாதாரவர்த்தகஉறவுகளைகொண்டிருப்பதால்அதனைநீடிக்கபரஸ்பரசெயற்பாடுகளைமுன்னெடுக்கவேண்டியஅவசியம்ஏற்பட்டுள்ளது. “ கட்டார் டோஹாவில் நடைபெற்ற “ கட்டார் – இலங்கை வர்த்தக சம்மேளன கூட்டத்தில் ” கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றுகையில் இவ்வாறுதெரிவித்தார். கட்டார் வர்த்தக சம்மேளனம் டோஹாவிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்துஏற்பாடுசெய்தஇந்தவர்த்தகசம்மேளனக்கூட்டத்தில்விசேடஅதிதிகளில்ஒருவராகஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனபங்கேற்றிருந்தார். இந்தவர்த்தகசம்மேளனக்கூட்டத்தில்அமைச்சர்களானராஜிதசேனாரத்ன , ரவூப்ஹக்கீம் , பைசர்முஸ்தபா , மற்றும்எம்.பிகளானமுஜீபுர்ரஹ்மான் , காதர்மஸ்தான்முன்னாள்மாகாணசபைஉறுப்பினர்அசாத்சாலிஉட்படகட்டார் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேய்க் அஹ்மத் பின் ஜாஸ்சிம் பின் மொஹம்மத் அல்-தானிமற்றும்ராஜதந்திரிகள் , முதலீட்டாளர்கள் , வர்

சபை இன்றேல் கட்சிகளுக்கு கடையடைப்பு!!!

சபை இன்றேல் கட்சிகளுக்கு கடையடைப்பு!!! சாய்ந்தமருதில் தீர்மானம் ( அஸ்லம் எஸ்.மௌலானா ,  எம்.வை.அமீர் ,  யூ.கே.காலீத்தீன்) சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் அபிலாஷையான தனியான உள்ளுராட்சிசபையை பெற்றுத்தருவதில் இந்தமக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகளும் கட்சிகளும் அசமந்தபோக்கைக் கடைப்பிடிப்பதால் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை கிடைக்கும்வரை அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் புறக்கணிப்பது என சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில்  2017-10-24  ஆம் திகதி மாலை மிகப்பரபரப்புடன் கூடிய, மரைக்காயர் சபையினர்,பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள்  மற்றும் ஊர்ப்பிரமுகர்களால் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உள்ளுராட்சிசபை விடயமாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களால் பகிரங்க வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இந்த மக்களின் நியாயமான கோரிக்கையை மழுங்கடிக்கும் விதத்தில் கிடப்பில் போடுவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படு

රට දෙකඩ කිරීමට යන නව ව්‍යවස්ථාව

රට දෙකඩ කිරීමට යන නව ව්‍යවස්ථාව සම්පාදන කටයුතු පරාජය කිරීමට සිංහල, දෙමළ, මුස්ලිම් ජනතාව එකමුතුවිය යුතු බවට වු බොදුබල සේනා සංවිධානයේ මහ ලේකම් ඥානසාර හිමියන්ගේ ප්‍රකාශය මුස්ලිම් උලමා පක්ෂය ප්‍රශංසාත්මකව සළකමින් ඒ සදහා අවශ්‍ය සියළු සහයෝගය ලබාදීමට ඉදිරිපත්වීමට සුදානම් බවටත් එම පක්ෂයේ නායක මුබාරක් අබ්දුල් මජීද් මවුලවිතුමන් අවධාරණය කරයි ඒ සම්බන්ධයෙන් මුස්ලිම් උලමා පක්ෂයේ නායක මුබාරක් අබ්දුල් මජීද් මවුලවිතුමන් විසින් බොදුබල සේනා සංවිධානය වෙත යවා ඇති ඊමේල් පණිවිඩයේ තවදුරටත් සදහන් කර ඇති වගනම්, පවතින ව්‍යවස්ථාව නිසි අයුරින් රජය ක්‍රියාත්මක කිරීමෙන් රටේ තිරසාර සාමයක් ගොඩනැගිය හැකි බවට අප අවධාරණය කරන්නෙමු. අප රටේ පවතින ව්‍යවස්ථාවේ බෞද්ධ ආගම ඇතුළුව සියළු ආගම්වලට අයිතිවාසිකම් ලබාදී තිබේ. නීතිය කිසිවෙකුට හෝ අතට ගැනීමට හෝ ජාතිය පදනම් කරගනිමින් කිසිවෙකුගේ හෝ අයිතිවාසිකම් අහිමිකිරීමට නොහැකි බව නීතියෙන් තහවුරු කර තිබේ. එහෙත් මේ තාක් කල් බලයට පත්වු සියළුම රජයන් ජාතිවාදී අයුරින් කටයුතු කොට තිබේ. රටේ පුරවැසියන් හට තමන් කැමැති ප්‍රදේශයක ජීවත්වීමේ අයිතිය ව්‍යවස්ථාවෙන් සහතික කොට තිබුණාද, පැවැති ර

மிதவாத இஸ்லாத்தை, நாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் - முகமத் பின் சல்மான்

-BBC- மிதவாத இஸ்லாம் என்று தாம் கூறும் ஒன்றைத் தங்கள் நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சௌதியின் பட்டத்து இளவரசர் கூறியுள்ளார். சௌதி அரேபிய தலைநகர் ரியாதில் முதலீட்டாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதிலளித்த இளவரசர் முகமத் பின் சல்மான், 1979-ஆம் ஆண்டுக்குப் பின் தங்கள் நாட்டில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதாகவும், தீவிரவாதத்தின் எச்சங்களை தங்கள் நாட்டு அதிகாரிகள் வெகு விரைவில் அழிப்பார்கள் என்றும் கூறினார். அழிவுக்கு வழிவகுக்கும் கோட்பாடுகளுடன் அடுத்த 30 ஆண்டுகளை சௌதி அரேபியா செலவிடாது என்றும் கூறினார் முகமத் பின் சல்மான். இளவரசர் சல்மான்தான் அங்கு நடைபெறும் பொருளாதார மற்றும் சமூகச் சீர்திருத்தங்களுக்குப் பின்புலமாக இருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பெண்கள் வாகனம் ஓட்ட நீண்ட காலமாக இருந்த தடை சமீபத்தில்தான் அங்கு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. செளதி அரேபியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைக்கப்படும் புதிய நகரம் மற்றும் பொருளாதார மண்டலத்தில் 500 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் இளவரசர் முகம்மது பின் சல்மா