BREAKING NEWS

நாங்கள் செய்த அநியாயம் என்ன? - Naseer Ahamed

ஒரு  முஸ்லிம்  முதலமைச்சர் இல்லாமல் போய்விடவேண்டும் என்று சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து அல்லது நபர்களைப் பார்த்து நான் வெட்கப் படுகின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபிஸ் நசீர் அஹமட்  தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் புன்னக்குடா விதீயில் நேற்று இடம்பெற்ற முதலமைச்சரின் பன்முகப்படுத்தபட்ட நிதி ஒதுக்கிட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட வாழ்வாதரா பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் இரவு பகலாக சமூகத்துக்ககாக உழைத்துக் கொண்டு இருக்கின்றோம்.  இதற்காக ஒரு ஐந்து சதமும் களவு செய்யாத எமது மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கின்றர்கள். அவர்களை பார்த்தும் நான் பெருமைப் படுகின்றேன். சட்டத் தரணிகள் ஆர்வம் உள்ளவர்கள் படித்தவர்கள் அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்தவர்கள் என சமூகத்துக்காக  உழைத்துக் கொண்டு இருக்கின்றோம். இங்கு இருக்கின்ற ஒவ்வொருவரும் உழைத்து இருக்கின்றர்கள்  அவர்களை பார்த்து நாங்கள் பெருமையடைகின்றோம்.

நாங்கள் செய்த அநியாயம் என்ன? அல்லது இந்த பதவியை எடுத்து விட்டு ஓடி ஒழிந்து உறங்கிக் கொண்டு இருந்தோமா” என்னுடைய சம்பளத்தில் ஐந்து சதம் கூட நான் எடுக்கவில்லை. அத்தனையும் மககளுக்காக செலவழித்துள்ளேன்.  ஒரு லீட்டர் பெற்றோல் கூட எனது தனிப்பட்ட தேவைக்காக பாவிக்கவில்லை. எதையும் நான் எனக்காக செய்யவில்லை. சமூகத்துக்காக தான் செய்தேன். ஏன் என்னை தொலைக்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

இந்த மண்ணுக்கு என்ன செய்தோம் என்று கேட்கின்றனர். ஐந்நூரு  மில்லியன் அல்ல மூவாயிரம் மில்லியன் இந்த மண்ணுக்காக செலவழித்துள்ளோம் அதை நான் சொல்லி காட்ட  விரும்பவில்லை.

இதுவரைக்கும் நாம் எந்தவித ஊழலும் செய்ய வில்லை.  ஊழல் செய்பவர்கள் எமக்கு பாக்கத்திலும் இருக்க முடியாது அதனால் தான் நாங்கள் அதிகாரத்தை கைபற்றிய உள்ளோம்.

கடந்த தேர்தலில் எனக்கும் தலைவர் ஹக்கீமுக்கும் ஒரு உடன்பாடு இருந்தது நான் மகாணசபை தேர்தல் கேட்பதற்காக இங்கு வரவில்லை பாராளுமன்றத்துக்கு தேசிய பட்டியலில் என்னை அனுப்புவதாக ஒரு உடன்பாடு இருந்தது ஆனாலும் தலைவர் என்னை மாகாணசபை தேர்தலில் போட்டியிட வைத்தார்.

பல்கலைக்கழகத்துக்கு போன பெண்கள் அடித்து துரத்தப்பட்ட போது அந்த பெண்களை எந்தவித பயமும் இல்லாமல் வைத்தியசாலைக்கு  பார்க்க  முயன்ற போது நூற்றுக் கணக்கானோர் தடுக்க முயன்ற போது இங்கு எதுவும் நடக்க கூடாது என்று பயமில்லாமல்  சென்றவன் நான். எந்த ஒரு பூச்சாண்டியையும் பார்த்து  பயப்படத் தேவையும் எங்களுக்கு இல்லை .

ஒரு பெரிய படை  அதிகார வீரரை பார்த்து பேசியதற்கு இங்கு மட்டக்களபில் இருக்கின்ற அதிகாரிகள் முதலமைச்சர் பதவியை பறியுங்கள் என்று சொன்ன அமைச்சர்கள் இருக்கிறார்கள் நான் இந்த பதவிக்காக சண்டைபிடிக்கவில்லை.

என்னுடைய கெளரவம்  இழக்கப்படுகின்ற போது கிழக்கு மாகாண முதலைசருக்கு ஒருவன் கை நீட்டி கதைக்கக் கூடாது என்பதற்காக எனது சபையில் கண்டித்தவன் நான் அதற்கு குரிய பொறுப்பு என்னிடம் இருக்கின்றது.

அகவே தயவு செய்து இந்த சில்லறை வேலைகளை நிறுத்துங்கள். எமக்கு இருக்கின்ற வேலைகளை பார்ப்பதற்கு நேரம் இல்லாமல் இருக்கின்றோம். புல்மோட்டையில் இருந்து பொத்துவில் வரைக்கும் எமது அபிவிருத்தி வேலைகளை செய்திருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar