யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச் செயலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

பாறுக் ஷிஹான்

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது குறித்த பெண்ணின் விடயமாக எமது தமிழ் கலாச்சாரத்திற்கு ஏற்புடையதாக குறித்த விடயத்தை அணுகாது பல்கலைக்கழக நிர்வாகம் குறித்த விடயம் தொடர்பாக தாம் விசாரணைகளை மேற்கொண்டு தருந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறியிருந்தும் மேற்படி சங்கமானது ஒரு சில அதிகாரிகள் மேலுள்ள தனிப்பட்ட கோபத்தின் நிமிர்த்தம் இப்பெண்ணை ஒரு பகைடக்காயாக உபயோகித்து மேற்படி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவ் நிலமை பல்கலைக்கழக சமூகத்தினரால் எமது கலாச்சார ரீதியில் ஒரு முறையற்ற செயலான எண்ணத்தை தோற்றிவித்துள்ளது. இவ் நிலைமையை அல்லது தங்களது இச்செயலை நியாயப்படுத்துவதற்காக இச்சங்கமானது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொண்டிருக்கிறார்கள். மற்றும் தங்களை பிரபல்யப்படுத்துவதற்கான செயற்பாடாக யாழ் பல்கலைக்கழகத்தில் தமது பணியை சீராக, நாகரீகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் மற்றும் ஒரு தொழிற்சங்கத்தின் மீது அவதூறான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்றார்கள். ஆகவே இணையத்தளத்திலும் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்ட செய்தி முற்றிலும் தவறான தன் புகழ்ச்சிக்காகவே இச்செய்தியை தனது படத்துடன் இவர் வெளியிட்டுள்ளார் என்பதனையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கமாகிய நாங்கள் தெரிவித்து கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய பணிப்பகிஸ்கரிப்பு தொடர்பாக மேலும் தனது அறிக்கையில்

08.09.2017 திகதியிடப்பட்டு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட செய்தி பிரசுரம் தொடர்பாக இன்றைய தினம் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் இவ் விடயம் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக எங்களுடைய ஜனநாயக ஊழியர் சங்க உறுப்பினர் ஒருவர் மிகவும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் தெரிகின்றது. இந்த விடயத்தை மிகவும் மோசமான முறையில் ஒரு சாரார் கையாண்டு வருகின்றனர். இந்தப் பெண்ணிற்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்குரிய முறையில் அவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்கும் அநீதி இழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் எமது ஜனநாயக ஊழியர் சங்கமானது தொடர்ச்சியான முறையில் எங்களுடைய வலியுறுத்தல்களையும் போராட்டங்களையும் மேற்கொள்ள எப்பொழுதுமே தயாராக இருக்கின்றோம். ஆயினும் எங்களுடைய பண்பாட்டுக்கு அமைய இந்த விடயம் மிகவும் பக்குவமாக கையாளப்படவேண்டியுள்ளது.  எங்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான சந்திப்பில் இந்த விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அநீதி இழைக்கப்பட்டவருக்கு உரிய முறையில் விசாரணை நடாத்தி அவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் இந்தப் பாதிக்கப்பட்ட ஊழியரிற்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி தந்துள்ளது. அதற்கு இந்த நீதி நியாயங்கள் சரியாக நடக்கவேண்டுமென்றால், அது உரிய முறையில் நடக்க வேண்டும். உரிய முறையில் நடப்பதன் மூலமே நீதி நிலைநாட்ட முடியும் என்பதில் எங்களுடைய சங்கம் உறுதியாக உள்ளது. எனவே இவ் விடயத்தில் நிர்வாகம் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் அவர்களுக்குரிய பொருத்தமான கால அவகாசத்தையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நாங்கள் அவர்களை தட்டிக்கேட்போம். நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு இவ் விடயமாக முன்னேற்றத்தில் கவனமெடுப்போம். நிர்வாகம் இதனை சரியான முறையில் கையாளாது விடும் பட்சத்தில் எங்களுடைய சங்கத்தினூடாக நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களை நடாத்துவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். ஆயினும் மீண்டும் நாங்கள் வலியுறுத்திக்கூறுவது என்னவென்றால் இவ்விடயம் ஒரு பக்குவமாக கையாளப்படவேண்டிய விடயம். எனவே இவ் விடயத்தில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எங்களுடைய ஊழியர் சங்கம் ஜனநாயக ரீதியாக செயற்படுகின்ற ஊழியர் சங்கம். எனவே இவ் விடயத்தை மிகவும் பக்குவமாகவும் எமது பண்பாட்டிற்கு ஏற்ற வகையிலும் நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். 

ஆனால் இது தொடர்பாக சுயலாபங்களுக்காகவும் தங்களுடைய தனிப்பட்ட அரசியல் இலாபங்களிற்காகவும் தங்கள் பிழைகளை மூடி மறைப்பதற்காகவும் ஒருசில சாரார் இப்பிரச்சினையை ஊதிப்பெருப்பித்து பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளையும் அது சுமூகமாக இயங்குவதற்குரிய சூழ்நிலைகளையும் தடுத்து பிழையான முறையில் இவ்விடயத்தை இட்டுச் செல்கின்றார்கள். இதன் மூலம் பல்கலைக்கழகத்திற்குள்ளே பல்வேறு விதமான முரண்பாடுகளையும் இவர்கள் தோற்றி இதனால் ஏற்படுகின்ற விழைவுகளைப்பற்றி இவர்களுக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லாத முறையில் இவர்கள் செயற்பாடு இடம்பெறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

எனவே இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். எமது சங்கம் இவ்விடயத்தை உரிய முறையில் கையாளும். எனவே இவ்வாறான விடயங்களில் எங்களது பல்கலைக்கழக சகல ஊழியர்கள் மற்றும் அங்கத்தவர்கள் இவை தொடர்பான அனைவரையும் இது தொடர்பாக எமது பண்பாடுகளுக்கு அமைவாகவும் மிகவும் கவனமாக நடந்து எங்களுக்கு இவ் விடயம் தொடர்பான செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

இது தொடர்பாக பிழையான முறையில் விடயங்களை கையாளுபவர்களுக்கு எதிராக எமது சங்கம் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தும் என்றும் எமது எச்சரிக்கையை தெரிவித்துக்கொள்கின்றோம். என குறிப்பிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்