இரு கைகளை இழந்தும் போதைப்பொருள் விநியோகம்;
இளைஞருக்கு மறியல்
( மினுவாங்கொடை நிருபர் )
இரு கைகளை இழந்தும் கூட, மிக நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரை, திவுலப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திவுலப்பிட்டிய உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் ஹெரோயின் விநியோகித்து வரும் படல்கம பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி இளைஞரை, மினுவாங்கொடை - தூனகஹ பிரதேசத்தில் வைத்து கைது செய்ய முடிந்ததாகவும், இதன்போது சந்தேக நபரிடம் ஹெரோயின் கிறாம் 3, மிலிகிறாம் 160 அடங்கிய 30 பாக்கெட்டுக்கள் இருந்ததாகவும் திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர், 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரை இவரை விளக்க மறியலில் வைக்குமாறு, மினுவாங்கொடை பிரதான மாஜிஸ்திரேட் நீதவான் சீலனி சத்துரந்தி உத்தரவு பிறப்பித்தார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment