யஹ்யாகான் பௌண்டேசனினால் மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு!
-எம்.வை.அமீர்-
பிரதேசத்தின் தேவையுடைய பொது நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள்,விளையாட்டுக்கழகங்கள் மற்றும் தனிநபர்கள் என பல்வேறு உதவிகளை செய்துவரும் யஹ்யாகான் பௌண்டேசன், 2017-09-04 ஆம் திகதி பார்வைக்குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ஒரு தொகுதி மூக்குக்கண்ணாடிகளை வளன்கிவைத்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளரும் சமூக சிந்தனையாளரும் தொழிலதிபருமான ஏ.சி.யஹ்யாகானின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பௌண்டேசனின் சார்பில் செயலாளர் ஏ.சி.எம்.றியால்,பொருளாளர் ஏ.எம்.நவாஸ்,உபதலைவர் ரீ.எல்.எம்.இல்லியாஸ் உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.பாடசாலைகளுக்கு போட்டோ பிரதி உபகரணங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் நிதியுதவி தனிநபர்களுக்கான மின் இணைப்பு நீர் இணைப்பு புலமைப்பரிசில் என பல உதவிகளை வழங்கி வரும் ஏ.சி.யஹ்யாகான்,விளையாட்டுக்கழகங்களின் அபிவிருத்திக்கும் உதவிவருவது குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வின்போது தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்